நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாம் அமைதியாக இருந்தால், மக்கள் அதை உண்மை என்று நினைப்பார்கள்: டத்தோஶ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

நாம் அமைதியாக இருந்தால், மக்கள் அதை உண்மை என்று நினைப்பார்கள். நான் பயப்படும் ரகத்தைச் சேர்ந்தவன் அல்ல. 

கட்சி இப்படித் தாக்கப்படும்போது, ​​என்னால் சும்மா இருக்க முடியாது என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் கூறினார்.

நேற்று தொழிலதிபர் விக்டர் சின் கெஅடிலான் கட்சியை பெருநிறுவன மாஃபியா விவகாரத்துடன் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இந்த விவகாரத்தில் இதற்கு முன்பு அமைதியாக இருக்கவே விரும்பினேன். ஆனால் கட்சி மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், குறிப்பாக முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லியின் தாக்குதல்கள், பொதுமக்களின் கருத்தைச் சரிசெய்ய அவரை முன்வரக் கட்டாயப்படுத்தின.

நான் நீண்ட காலமாக அமைதியாக இருந்து வருகிறேன். ஆனால் கட்சி இப்படித் தாக்கப்பட்டு, பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது, ​​உண்மையை விளக்குவது துணைத் தலைவர் என்ற முறையில் எனது பொறுப்பாகும்.

நான்அமைதியாக இருந்தால், மக்கள் அதை உண்மை என்று நினைப்பார்கள் என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அதே நேரத்தில், இந்த விவகாரம் குறித்து தவறான கண்ணோட்டத்தை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரபிசியை டத்தோஶ்ரீ ரமணன் வெளிப்படையாக விமர்சித்தார்.

அவர் ஒரு தோல்வியடைந்த அமைச்சர். அவருடைய வெற்றி என்ன? பாடுவா? தானியங்கி விற்பனை இயந்திரமா? அவருடைய வெற்றி என்ன? என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு கோழை.

தான் தோல்வியடைந்துவிட்டோம் என்பது அவருக்குத் தெரியும், அதனால்தான் அவர் விரைவாக ராஜினாமா செய்தார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset