நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிஸ்டர் ஆர் நான் அல்ல; விக்டர் சின்னால் மட்டுமே பதிலளிக்க முடியும்: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

மிஸ்டர் ஆர் நான் அல்ல. அதற்கு விக்டர் சின்னால் மட்டுமே பதிலளிக்க முடியும்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் இதனை கூறினார்.

பெருநிறுவன மாஃபியா விவகாரத்தில் தொழிலதிபர் விக்டர் சின்னுடன் தொடர்புடைய 9.5 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

நான் விக்டர் சின்னை சந்தித்ததோ அல்லது அறிந்ததோ இல்லை.

சர்ச்சைக்குரிய அந்தத் தொழிலதிபர் குறிப்பிடும் மிஸ்டர் ஆர் நான் அல்ல.

மேலும் அந்தத் தொழிலதிபர் தனது பெயரைக் குறிப்பிடுவதை அவர் மறுத்துள்ளார்.

மிஸ்டர் ஆர் யார் என்பதற்கு சின்னால் மட்டுமே பதிலளிக்க முடியும்.

சிலர் மிஸ்டர் ஆரை என்னுடன் தொடர்புபடுத்த முயற்சிக்கின்றனர். மிஸ்டர் ஆர் நான்தான் என்று அவர்களால் சொல்லப்படுகிறது.

நான் சின்னுடன் கூட்டுச் சதியில் ஈடுபட்டது போல, முன்னாள் துணைத் தலைவரின் சைபர் ட்ரூப்பர் என்னைத் தாக்குவதை நான் பார்த்தேன்.

நான் விக்டர் சின்னை ஒருபோதும் சந்தித்ததில்லை. அவர் யார் என்று எனக்குத் தெரியாது.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட ஒரு கதையை முன்னிறுத்தி, ரபிஸியின் இணையப் படையினர் தன்னை சமூக ஊடகங்களில் தாக்கியதாக டத்தோஸ்ரீ ரமணன் குற்றம் சாட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன்






தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset