செய்திகள் மலேசியா
கம்போங் முனியாண்டி ஸ்ரீ மகா முனீஸ்வரர் அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்; இளைஞர்களின் ஒத்துழைப்பில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது: மணிமாறன்
பெட்டாலிங்ஜெயா:
கம்போங் முனியாண்டி ஸ்ரீ மகா முனீஸ்வரர் அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இளைஞர்களின் ஒத்துழைப்பில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஆலயத் தலைவர் மணிமாறன் முருகேசு இதனை கூறினார்.
பெட்டாலிங்ஜெயா தாமான் கனகாபுரம் கம்போங் முனியாண்டியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயம் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் வரலாற்றை கொண்டதாகும்.
இவ்வாலத்தின் கும்பாபிஷேக விழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தலைமை குருக்கள் சிவாகம ரத்ன சிவஸ்ரீ பி. யாகேசன் குருக்கள், ஆலய தலைமை குருக்கள் சிவாச்சாரியார் சிவஸ்ரீ கனகலிங்க ருத்ரா குருக்கள் ஆகியோரின் தலைமையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுற்றுவட்டார மக்கள் குறிப்பாக அதிகமான இளைஞர்கள் இக்கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
இவ்வேளையில் கும்பாபிஷேக விழா வெற்றிகரமாக நடைபெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று மணிமாறன் கூறினார்.
இவ்வாலயத்தின் திருப்பணி தொடங்கி நீண்ட ஆண்டுகள் ஆகின்றன.
ஆனால் தற்போது சுற்றுவட்டார இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இவ்வாலயத்தை கட்டி முடித்துள்ளனர்.
மேலும் சமய வழிபாடுகளை தவிர்த்து இவ்வாலயம் சமூக சேவைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வேளையில் அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று ஆலயத்தின் ஆலோசகரும் பத்துமலை ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தின் தலைவருமான யுவராஜா குருசாமி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 6:09 pm
நான் இன்னும் கேசியோ கைக்கடிகாரம் தான் அணிந்திருக்கிறேன்: ஃபஹ்மி
March 25, 2026, 6:08 pm
மேற்கு ஆசிய மோதல்; போர்நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை மலேசியா வலியுறுத்துகிறது: முஹம்மது ஹசான்
March 25, 2026, 6:07 pm
பெருநிறுவன மாபியா விவகாரம்; சட்ட அமலாக்க அமைப்பில் சதி உள்ளது: ரபிசி
March 25, 2026, 6:06 pm
விக்டர் சின் எங்கே இருக்கிறார் என்பது அதிகாரிகளுக்கு தெரியும்: சைபுடின் நசுதியோன்
March 25, 2026, 3:53 pm
மிஸ்டர் ஆர் நான் அல்ல; விக்டர் சின்னால் மட்டுமே பதிலளிக்க முடியும்: டத்தோஸ்ரீ ரமணன்
March 25, 2026, 3:05 pm
இறந்தவர்களின் சாம்பலுக்கும் மிரட்டலா?: நீலாயில் அரங்கேறிய பகீர் திருட்டு
March 25, 2026, 2:27 pm
