செய்திகள் மலேசியா
"நாட்டின் அரண்கள் நீங்கள்": 219-வது போலிஸ் தினத்தில் காவல்துறைக்கு மாமன்னர் வாழ்த்து
கோலாலம்பூர்:
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அனைத்து அரச மலேசிய காவல் துறையினருக்கும் (PDRM) முன்னாள் காவல் அதிகாரிகளுக்கும் 219-வது போலிஸ் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
PDRM-இன் கௌரவ ஆணையர் தலைவராகவும் இருக்கும் மாமன்னர், எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் தங்களது கடமையைச் செய்யத் தயாராக இருக்கும் போலிஸ் வீரர்களின் தியாகத்தைப் பாராட்டி நன்றியுணர்வையும் தெரிவித்தார். நாட்டு மக்களின் அமைதிகாக்கவும் நலனுக்காகவும் அயராது உழைக்கும் ஒவ்வொரு காவல் அதிகாரியும் போற்றப்பட வேண்டியவர்களே என்றார் அவர்.
மேலும், நாட்டின் பாதுகாப்பின் முக்கிய தூண்களில் ஒருவர்களாக விளங்கும் காவல் அதிகாரிகள் பண்டிகை, அவசரகால சூழ்நிலைகள் உட்பட எந்த நிலையிலும் கடமையாற்றத் தயாராக இருக்கின்றனர் என்றும் மாமன்னர் புகழாரம் சூட்டினார்.
"அல்லாஹ் எப்போதும் கடமையாற்றும் அனைத்து போலீஸ் படை வீரர்களையும் காப்பாற்றட்டும்.
"நம்மை விட்டு என்றென்றும் பிரிந்து சென்றவர்களுக்கு அல்-ஃபாத்திஹா. அவர்கள் நல்லவர்கள் மத்தியில் இடம் பெறட்டும்" என்று மாமன்னர் இன்று தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவின் வழியாக கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 6:09 pm
நாம் அமைதியாக இருந்தால், மக்கள் அதை உண்மை என்று நினைப்பார்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
March 25, 2026, 6:09 pm
நான் இன்னும் கேசியோ கைக்கடிகாரம் தான் அணிந்திருக்கிறேன்: ஃபஹ்மி
March 25, 2026, 6:08 pm
மேற்கு ஆசிய மோதல்; போர்நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை மலேசியா வலியுறுத்துகிறது: முஹம்மது ஹசான்
March 25, 2026, 6:07 pm
பெருநிறுவன மாபியா விவகாரம்; சட்ட அமலாக்க அமைப்பில் சதி உள்ளது: ரபிசி
March 25, 2026, 6:06 pm
விக்டர் சின் எங்கே இருக்கிறார் என்பது அதிகாரிகளுக்கு தெரியும்: சைபுடின் நசுதியோன்
March 25, 2026, 3:53 pm
மிஸ்டர் ஆர் நான் அல்ல; விக்டர் சின்னால் மட்டுமே பதிலளிக்க முடியும்: டத்தோஸ்ரீ ரமணன்
March 25, 2026, 3:05 pm
இறந்தவர்களின் சாம்பலுக்கும் மிரட்டலா?: நீலாயில் அரங்கேறிய பகீர் திருட்டு
March 25, 2026, 2:27 pm
