செய்திகள் வணிகம்
ஒரே வாரத்தில் RM82 ரிங்கிட் குறைந்த தங்க விலை: நகைக் கடைகளில் திரளும் மக்கள்
மாச்சாங்:
உள்ளூர் சந்தையில் தங்க விலை கடந்த ஒரு வாரத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால், ஹரிராயா பண்டிகைக்குப் பிறகும் மக்கள் தங்கம் வாங்குவதற்கு நகைக் கடைகளுக்கு திரண்டு வருகின்றனர்.
மார்ச் 15ஆம் தேதி, ஒரு கிராம் 916 தங்கம் RM607.72 ரிங்கிட் ஆக இருந்தது. அதன் பிறகு விலை தொடர்ந்து சரிந்து, மார்ச் 18ஆம் தேதி RM598.89, மார்ச் 19ஆம் தேதி RM584.19 ஆகக் குறைந்தது. பின்னர் மார்ச் 23ஆம் தேதி RM539 ஆகவும், செவ்வாய்க்கிழமை RM525.73 ஆகவும் மேலும் குறைந்தது. மொத்தத்தில் ஒரு வாரத்தில் சுமார் RM82 ரிங்கிட் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த விலை சரிவை மக்கள் ஒரு வாய்ப்பாகக் கருதி தங்கம் வாங்க முனைந்துள்ளனர். குறைந்த விலையில் தங்கம் வாங்கி சேமிப்பை அதிகரிக்கலாம் என்ற எண்ணத்தில் பலர் நகைக் கடைகளை நாடுகின்றனர்.
இந்நிலையில், இவ்வாறான பெரிய அளவிலான விலை சரிவு அரிதாகும் என நகைக் கடை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரணமாக உலகளாவிய பதற்ற காலங்களில் தங்க விலை உயரும் நிலையில், தற்போதைய சரிவு மக்களிடையே அதிக வாங்குதலை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கோலாலம்பூர் ஜாலன் மஸ்ஜித் இந்தியா தங்க நகை வியாபாரிகள் ஒரு கிராம் 916 ஆபரணத் தங்கம் 560 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
