செய்திகள் இந்தியா
மாட்டை பலி கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு: இளைஞருக்கு கொலை மிரட்டல்
ஹரித்வார்:
மாட்டை பலி கொடுக்க கொண்டு சென்றதாக சந்தேகித்து, ஒரு இளைஞரை சிலர் வலுக்கட்டாயமாக காரில் இழுத்துச் சென்று தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சதாம் என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், மார்ச் 19ஆம் தேதி இரவில் இரண்டு மாடுகள், ஒரு கன்றைக் கொண்டு சென்றபோது, காளி கோவில் அருகே சிலர் அவரது வாகனத்தைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதன்பின், மாடுகளை பலி கொடுக்க கொண்டு செல்கிறார் என குற்றம் சாட்டிய குழுவினர், அவரை காரில் ஏற்றி கடுமையாக தாக்கியதுடன், மீண்டும் மாடுகளை கொண்டு சென்றால் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான காணொலி சமூ வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் உண்மை நிலையை உறுதிப்படுத்த போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
