செய்திகள் இந்தியா
"எக்ஸ்ட்ரா காசு தர்றோம்.. பார்சல் பண்ணுங்க": முதியவரை மூட்டையில் கட்டி கொண்டு வந்த 5 பேர்
பெங்களூர்:
ஒரு விசித்திரமான சம்பவத்தில், ஒரு குடும்பத்தினர் முதியவர் ஒருவரை 'கூரியர் ' செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பெங்களூரின் வயலி காவலில் நடந்த சம்பவத்தைக் காட்டும் சிசிடிவி காட்சிகளும் வைரலாகியுள்ளன.
ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் உள்ளூர் கூரியர் சேவை அலுவலகத்திற்குள் நுழைந்து, அவர்கள் கொண்டு வந்த பையைக் அனுப்புமாறு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரியதாகத் தோன்றிய அப்பையில் ஏற்பட்ட அசைவு அலுவலக ஊழியர்களை அதைத் திறக்க வைத்தது.
அப் பையில் ஒரு முதியவர் மூச்சு விட சிரமப்படுவதைக் கண்டபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கூரியர் மூலம் அம் முதியவரை அனுப்ப குடும்பத்தினர் வலியுறுத்தி மேலும் கூடுதல் கட்டணத்தை செலுத்தவும் தயாராக இருந்ததால் இது ஊழியர்களுடன் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.
ஊழியர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் வளாகத்தை விட்டு வெளியேறினர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, இந்தச் சம்பவம் பொதுப் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பது தொடர்பான சமூக ஊடக உள்ளடக்கத்திற்காக மட்டுமே அரங்கேற்றப்பட்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
