செய்திகள் இந்தியா
ஆட்டோ ஓட்டி வாழ்வாதாரத்தை வெல்லும் வீர மங்கையர்கள்
சூரத்:
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில், குடும்ப பாரத்தைச் சுமப்பதற்காக ஆட்டோ ஓட்டும் தொழிலைத் தேர்வு செய்துள்ள பெண்களின் வாழ்க்கை, வெறும் வருமானத்திற்கானதாக மட்டுமல்லாமல், அன்றாடப் போராட்டங்களின் களமாகவும் உள்ளது.
நீண்டகாலமாகப் பொதுவெளியில் ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த இத்தொழிலில் பெண்களின் விடாமுயற்சியால் தடம் பதித்து வருகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் பபிதா குப்தா, போதிய வருமானம் இல்லாத நிலையிலும், தனது பேரனை ஆட்டோவிலேயே வைத்துக்கொண்டு பயணிகளை ஏற்றிச் செல்கிறார்.
மறுபுறம், கணவரின் மறைவுக்குப் பின் எவ்வித வாழ்வாதாரமும் இன்றித் தவித்த கிரண்பென், சமூக விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் ஆட்டோ ஓட்டுநராக உருவெடுத்துள்ளார்.
இவர்களின் இந்தத் துணிச்சலான முடிவு, வறுமையின் பிடியில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள எடுக்கப்பட்ட தற்காப்பு நடவடிக்கையாகும்.
பெண் ஓட்டுநர் என்ற காரணத்தினால் சில பயணிகள் காட்டும் ஏளனம், சாலைகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், நீண்ட நேர வேலைப்பளு ஆகியவற்றிற்கு மத்தியிலும் இவர்கள் இயங்கி வருகின்றனர்.
குறிப்பாக, பொது இடங்களில் இவர்களுக்குத் தேவையான அடிப்படை சுகாதார வசதிகள் (கழிப்பறை போன்றவை) இல்லாதது இவர்களின் பெரும் துயரமாக உள்ளது.
இருப்பினும், தங்களின் உழைப்பில் கிடைக்கும் வருமானம் தங்களுக்குத் தன்னாட்சியையும், கௌரவத்தையும் தருவதாக இந்தப் பெண்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
