செய்திகள் வணிகம்
தங்க விலையின் வீழ்ச்சி நீடிக்காது: ஸ்டீபன் இன்னெஸ் அறிவிப்பு
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் வெளியான பகுப்பாய்வின்படி, தற்போது தங்க விலை குறைந்து காணப்படுவது தற்காலிகமானது மட்டுமே என்றும், நீண்டகால பொருளாதார நிலைப்பாட்டில் இது மாற்றமல்ல என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தை பணப்புழக்கம், அதிகரித்த வருமான விகிதம், தற்காலிகமாக குறைந்த உடனடி தேவைகள் ஆகியவை இந்த சரிவிற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
எஸ்.பி.ஐ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இணையாளர் ஸ்டீபன் இன்னெஸ், முதலீட்டாளர்கள் உலக பொருளாதாரத்தின் இறுதி நிலையை தவறாக புரிந்து கொண்டதாலும், பணவியல் தளர்வு நோக்கில், ஏற்படுவதையும் சரியாக மதிப்பிடாததாலும் தங்கம் தற்போது மாற்ற கட்டத்தில் சிக்கியுள்ளது என்றார்.
உயர்ந்த வட்டி விகிதங்கள் கடன் சந்தை, பங்குச் சந்தை, பொருளாதார வளர்ச்சியில் அழுத்தத்தை அதிகரித்துள்ளன. இந்த அழுத்தம் நீடித்தால், பின்னர் கொள்கை, ஏற்பட்டு வட்டி விகிதம் குறையும்; அப்போது தங்கம் மீண்டும் வலுப்பெறும் என்றும், அது பொருளாதார அசாதாரண நிலைக்கு எதிரான பாதுகாப்பு முதலீடாக செயல்படும் என்றும் அவர் விளக்கினார்.
இதற்கிடையில், துருக்கி அரசு செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது, தங்க விலை கடந்த 1983க்கு பிறகு மிகப்பெரிய வாராந்திர வீழ்ச்சியை சந்தித்து, 10 சதவீதத்திற்கும் மேல் குறைந்து அமெரிக்க டாலர் 4,500க்கு கீழ் சரிந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் 4,477.5 முதல் 4,735.81 டாலர் வரை மாறுபட்ட நிலையில், இறுதியாக 4,509.08 டாலராக குறைந்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
