செய்திகள் இந்தியா
மேற்காசிய போர் சூழல் குறித்து மலேசிய பிரதமருடன் மோடி உரையாடல்
புதுடில்லி:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது அவர்களிடம் மேற்காசிய போர் சூழல் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார்.
மேலும், அந்த பிராந்தியத்தில் நிலவும் மோதலை தணிப்பதற்கும், தொடர்ந்து அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் இந்தியா ஆதரவளிப்பதாக மோடி தெரிவித்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுகளில் இந்திய பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,
மலேசியாவின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நடத்திய உரையாடலில், மேற்காசியாவின் கவலைக்குரிய சூழல் குறித்தும், பேச்சுவார்த்தை மூலம் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டு கொண்டு வருவதில் எங்களுக்கு இருக்கும் உறுதிப்பாடு குறித்தும் விவாதித்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
