செய்திகள் இந்தியா
எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: இந்தியா கடும் எதிர்ப்பு
இந்தியா:
மேற்கு ஆசியாவில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா பகுதியில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டு கட்டமைப்புகள், குறிப்பாக எரிசக்தி நிலையங்களை இலக்காகக் கொள்ள வேண்டாம் என இந்தியா முன்பே வலியுறுத்தியிருந்தது. தற்போதைய தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி நிலைத்தன்மையை பாதிக்கக்கூடியவை என்றும், இத்தகைய செயல்கள் ஏற்க முடியாதவை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், உலகின் மிகப்பெரிய எரிவாயு வளமாகக் கருதப்படும் தெற்கு பார்ஸ் களத்தில் தாக்குதல் நடத்தியதையடுத்து, ஈரான் அதற்கு பதிலடி நடவடிக்கையாக வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
தாக்குதல்களுக்கு முன், அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியேற வேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஈரானின் வான்வழித் தாக்குதல்களால் கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு நிலையம் கடுமையாக சேதமடைந்ததாகவும், சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் சில எரிவாயு நிலையங்களை தற்காலிகமாக மூடியுள்ளதுடன், குவைத்தில் உள்ள இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், கத்தார், எகிப்து, சவூதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மார்ச் 18 அன்று ரியாத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் இந்த கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
