செய்திகள் மலேசியா
மருத்துவ சாதன ஆணையத்தின் அதிரடி சோதனை: பதிவு செய்யாத லென்ஸ் விற்பனைக்கு முற்றுப்புள்ளி
கோலாலம்பூர்:
பதிவு செய்யாத கண் லென்ஸ்களை சிறுதொழில் விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கும் வழங்குநர்களுக்கு எதிராக மருத்துவ சாதன ஆணையம் (எம்.டி.ஏ) தனது நடவடிக்கையை விரிவுபடுத்த உள்ளது. இது மார்ச் 16-ஆம் தேதி வங்சா மாஜு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு சோதனைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும்.
மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் 19 வணிக வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பரிந்துரை இல்லாமல், பதிவு செய்யாத லென்ஸ்கள் விற்பனை செய்யப்பட்டதாக முன் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பதிவு செய்யாத லென்ஸ்களை விற்றவர்களுக்கு உடனடியாக விற்பனை நிறுத்த உத்தரவிடப்பட்டதுடன், சிலருக்கு எச்சரிக்கை வழங்கி பொருட்களை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
முன்னிலை விசாரணையில், இந்த லென்ஸ்கள் உள்ளூர் விற்பனையாளர்கள், தாய்லாந்து, சீனாவில் இருந்து இறக்குமதி, இணையம் மூலம் வாங்கப்படுவது போன்ற சீரற்ற விநியோக அமைப்பு இருப்பது தெரியவந்தது. சில கடைகள் உணவுப் பொருட்கள் அல்லது பொதுப் பொருட்கள் விற்பனை உரிமத்துடன் இயங்கியபோதும், கண் லென்ஸ்களை விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோத விநியோகத்தின் மூலத்தையே குறிவைத்து மொத்த விற்பனையாளர்களுக்கும், வழங்குநர்களுக்கும் எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 1:44 pm
பெருநாள் காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மாமன்னர் வலியுறுத்து
March 19, 2026, 12:49 pm
அரசைக் கவிழ்க்க முயன்ற வழக்கு; மேலும் 14 பேர் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவர்: ஐஜிபி
March 19, 2026, 12:48 pm
தமீம் டஹாரி புனித பூமியில் இருப்பதாக நம்பப்படுகிறது: ஐஜிபி
March 19, 2026, 11:27 am
ஆண் குழந்தை கொலை குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாக குழந்தைகள் பராமரிப்புப் பணியாளர் தலையசைந்தார்
March 19, 2026, 11:26 am
சுங்கை பூலோ மக்களுக்காக 8 லட்சம் ரிங்கிட் சம்பளம் நன்கொடை: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்
March 19, 2026, 11:25 am
மேற்கு ஆசிய மோதல் பகுதிகளில் இருந்து மலேசியர்களை வெளியேற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது
March 19, 2026, 11:24 am
பாஸ் கட்சியைச் சந்தித்ததை பகாங் மஇகா மறுத்துள்ளது
March 19, 2026, 11:06 am
"ஒற்றுமையே பலம்": சிலாங்கூர் இளவரசரின் ஈகைத் திருநாள் வாழ்த்து
March 19, 2026, 10:46 am
