நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பூலோ மக்களுக்காக 8 லட்சம் ரிங்கிட் சம்பளம் நன்கொடை: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்

கோலாலம்பூர்

மனிதவள அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், 2023ஆம் ஆண்டு முதல் தமது முழு சம்பளம், அலவன்ஸ்களை சுங்கை பூலோ தொகுதி மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

இதுவரை அவர் வழங்கிய ஒட்டுமொத்த பங்களிப்புத் தொகை சுமார் 800,000 ரிங்கிட்டை எட்டியுள்ளது.

15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றது முதல், தமக்குக் கிடைக்கும் வருமானத்தை மக்களுக்கே திருப்பி அளிப்பதாக வழங்கிய வாக்குறுதியை டத்தோஶ்ரீ ரமணன் நேர்த்தியாக நிறைவேற்றி வருகிறார்.

இனம்,  மதப் பாகுபாடின்றி மக்களின் சுமையைக் குறைக்கும் ஒரு தொடர்ச்சியான முயற்சியாக இந்த மனிதாபிமான அணுகுமுறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் மட்டும் மசூதிகள், சூராக்கள், சீனக் கோவில்கள், இந்து ஆலயங்கள், தேவாலயங்களுக்கு என மொத்தம் 65,200 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி சமய நிறுவனங்களின் மேலாண்மைக்கும், புனித ரமலான் மாதத்தில் தேவையுள்ள மக்களுக்கு உதவுவதற்கும் இலக்காகக் கொண்டு விநியோகிக்கப்பட்டது.

தமது பங்களிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த டத்தோஶ்ரீ ரமணன், வழங்கப்பட்ட ஒவ்வொரு உதவியும் ஒரு மக்கள் பிரதிநிதியாகத் தாம் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு என்று குறிப்பிட்டார்.

இது வெறும் தொகையைப் பற்றிய விஷயம் அல்ல, மாறாகப் பொறுப்புணர்வு சார்ந்தது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியைச் செயல்பாட்டின் மூலம் நிலைநிறுத்துவதே எனது கடமை என்று அவர் வலியுறுத்தினார்.

அதே வேளையில், இந்த ஆண்டு ரமலான் காலத்தை முன்னிட்டு சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் 10,000 பொட்டலங்கள் 'புபுர் லம்புக்' கஞ்சி விநியோகிக்கப்பட்டது.

நான்காவது ஆண்டாகத் தொடரும் இந்தத் திட்டம், உள்ளூர் மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான ஒரு முக்கிய அங்கமாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset