செய்திகள் மலேசியா
"ஒற்றுமையே பலம்": சிலாங்கூர் இளவரசரின் ஈகைத் திருநாள் வாழ்த்து
கோலாலம்பூர்:
இந்த ஆண்டு ஈகைத் திருநாள் கொண்டாட்டங்கள் சிலாங்கூர் மக்களுக்கு மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் அளித்து, அவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று சிலாங்கூர் பட்டத்து இளவரசர், தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷரபுதீன் இத்ரிஸ் ஷா தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று இரவு முகநூலில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளியில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களைச் சந்திக்கும் நடைமுறையாலும், வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வதாலும் இந்தப் பண்டிகைக் கொண்டாட்டம் மேலும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அவரது அரச பெருந்தகை கூறினார்.
"இந்தப் புனித ஷவ்வால் மாதம், சிலாங்கூர் வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் கொண்டு வந்து, அவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதாக அமையட்டும்.
"நான், தெங்கு அமீர் ஷா, எனது துணைவியார் டத்தின் படுக்கா ஸ்ரீ அஃப்ஸா ஃபடீனியுடன் இணைந்து, சிலாங்கூர் மக்கள் அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
"எங்கள் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களுடன், எனது குடும்பத்தினரின் வாழ்த்துக்களை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்," என்று சுல்தான் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 1:44 pm
பெருநாள் காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மாமன்னர் வலியுறுத்து
March 19, 2026, 12:49 pm
அரசைக் கவிழ்க்க முயன்ற வழக்கு; மேலும் 14 பேர் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவர்: ஐஜிபி
March 19, 2026, 12:48 pm
தமீம் டஹாரி புனித பூமியில் இருப்பதாக நம்பப்படுகிறது: ஐஜிபி
March 19, 2026, 11:27 am
ஆண் குழந்தை கொலை குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாக குழந்தைகள் பராமரிப்புப் பணியாளர் தலையசைந்தார்
March 19, 2026, 11:26 am
சுங்கை பூலோ மக்களுக்காக 8 லட்சம் ரிங்கிட் சம்பளம் நன்கொடை: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்
March 19, 2026, 11:25 am
மேற்கு ஆசிய மோதல் பகுதிகளில் இருந்து மலேசியர்களை வெளியேற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது
March 19, 2026, 11:24 am
பாஸ் கட்சியைச் சந்தித்ததை பகாங் மஇகா மறுத்துள்ளது
March 19, 2026, 10:46 am
