நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேற்கு ஆசிய மோதல் பகுதிகளில் இருந்து மலேசியர்களை வெளியேற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது

புத்ராஜெயா:

மேற்கு ஆசிய மோதல் பகுதிகளில் இருந்து மலேசியர்களை வெளியேற்றும் பணி தற்போது ஒத்திவைக்கப்பட்டது.

வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மேற்கு ஆசிய மோதல் மண்டலங்களிலிருந்து மலேசியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சில சூழ்நிலைகளில், குறிப்பாக மலேசியர்களைப் பாதிக்கும் பாதுகாப்புப் பிரச்சினைகள் அல்லது அவசரகாலச் சூழ்நிலைகள் சம்பந்தப்பட்ட சமயங்களில், அரசாங்கம் தொடர்ந்து உதவி செய்வதிலும், வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் தனது பங்கை வகிக்கும் என்று தேசியப் பாதுகாப்பு மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான நாடுகளில் வான்வெளி திறக்கப்பட்டு, மலேசியாவிற்கு விமானங்கள் இயக்கப்படுவதால், தாயகம் திரும்ப விரும்பும் மலேசியர்கள் வணிக விமான டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று துபாயில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் எக்ஸ் என்ற சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset