நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாள் காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மாமன்னர் வலியுறுத்து

கோலாலம்பூர்:

பெருநாள் கொண்டாட்டத்தின் போது தங்கள் நம்பிக்கையையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் அமலாக்க முகமைகளுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பாராட்டு தெரிவித்தார்.

தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் குடும்பங்களுடன் நோன்பு பெருநாளை கொண்டாடும்போது,

அமைதி, பொது ஒழுங்கு, மக்களின் நல்வாழ்வு பேணப்படுவதை உறுதி செய்வதற்காகப் பணியில் இருக்கும் பாதுகாப்பு, அமலாக்கப் பணியாளர்களின் தியாகங்களை அவர் பெரிதும் பாராட்டினார்.

பாதுகாப்புப் படையின் அனைத்து உறுப்பினர்களும் எப்போதும் இறைவனின் பாதுகாப்பில் இருக்கவும், நல்ல ஆரோக்கியத்துடனும்  அருளோடும், தங்கள் கடமைகளைச் செய்யும்போது அனைத்து விஷயங்களும் எளிதாக்கும் என அவர் பிரார்த்தனை செய்தார்.

முன்னதாக, சுல்தான் இப்ராஹிம் இன்று இங்குள்ள இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்தார்.

மக்கள் சாலையில் பயணிக்கும்போது, ​​குறிப்பாகத் தங்கள் அன்புக்குரிய குடும்பத்தினருடன் ஈதுல் ஃபித்ரியைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குத் திரும்பும்போது, ​​எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று மாமன்னர் அறிவுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset