செய்திகள் மலேசியா
தமீம் டஹாரி புனித பூமியில் இருப்பதாக நம்பப்படுகிறது: ஐஜிபி
கோலாலம்பூர்:
இந்துக்களின் புனித சின்னமான திரிசூலத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படும் தமீம் டஹாரியை போலிஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.
ஆரம்ப சோதனையின் முடிவுகளின்படி, அவர் தாய்லாந்தில் இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது அவர் சவூதி அரேபியாவில் இருப்பதாக நம்பப்படுவதாக தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமது காலித் இஸ்மாயில் கூறினார்.
தமீம் டஹாரி தாய்லாந்துக்குச் சென்றுள்ளார் என்று எங்கள் அறிக்கை காட்டுகிறது. ஆனால் அவர் புனித பூமியில் இருக்கலாம் என்ற தகவலும் உள்ளது.
நாங்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, நேரம் வரும்போது, அவரை குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று அவர் இன்று இங்குள்ள புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
முன்னதாக ஜம்ரி வினோத், அருண் துரைசாமி உட்பட நான்கு பேர் மீது, மத ரீதியான தூண்டுதல் வழக்கு தொடர்பாக செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டப்படும் என்று முகமது காலித் உறுதிப்படுத்தியதாக கடந்த திங்கட்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 1:44 pm
பெருநாள் காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மாமன்னர் வலியுறுத்து
March 19, 2026, 12:49 pm
அரசைக் கவிழ்க்க முயன்ற வழக்கு; மேலும் 14 பேர் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவர்: ஐஜிபி
March 19, 2026, 11:27 am
ஆண் குழந்தை கொலை குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாக குழந்தைகள் பராமரிப்புப் பணியாளர் தலையசைந்தார்
March 19, 2026, 11:26 am
சுங்கை பூலோ மக்களுக்காக 8 லட்சம் ரிங்கிட் சம்பளம் நன்கொடை: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்
March 19, 2026, 11:25 am
மேற்கு ஆசிய மோதல் பகுதிகளில் இருந்து மலேசியர்களை வெளியேற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது
March 19, 2026, 11:24 am
பாஸ் கட்சியைச் சந்தித்ததை பகாங் மஇகா மறுத்துள்ளது
March 19, 2026, 11:06 am
"ஒற்றுமையே பலம்": சிலாங்கூர் இளவரசரின் ஈகைத் திருநாள் வாழ்த்து
March 19, 2026, 10:46 am
