செய்திகள் மலேசியா
பெர்சத்துவில் தொடர்ச்சியான மோதல்: பத்ருல் ஹிஷாம் கட்சியிலிருந்து நீக்கம்
கோலாலம்பூர்:
பெர்சத்து கட்சியின் போர்ட்டிக்சன் தலைவர் பதவி வகித்த பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு குறித்து கட்சியின் ஒழுக்கக் குழு செயலாளர், நேற்று மாலை தகவல் தொடர்பு செயலியின் மூலம் அவருக்கு அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை விமர்சித்த பத்ருல் ஹிஷாம், கட்சி இனி பொதுமக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தவில்லை என்றும், குறிப்பிட்ட குழுக்களின் நலனையே முன்னிலைப்படுத்துகிறது என்றும் குற்றஞ்சாட்டினார். 2024 நவம்பர் மாதத்தில் அந்தப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றும், ஊழலை எதிர்க்கும் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
முன்னதாக, மார்ச் 10ஆம் தேதி அவருக்கு கட்சியின் ஒழுக்கக் குழுவிலிருந்து விளக்கக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. கட்சியின் பெயருக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் இடம்பெற்றிருந்தன. அதற்கு பதிலளிக்க மறுத்த அவர், குற்றச்சாட்டுகள் பொருத்தமற்றவை என தெரிவித்தார்.
இதற்கிடையில், பெர்சத்து தலைவர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின், முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பல முக்கிய தலைவர்கள் நீக்கம், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 1:44 pm
பெருநாள் காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மாமன்னர் வலியுறுத்து
March 19, 2026, 12:49 pm
அரசைக் கவிழ்க்க முயன்ற வழக்கு; மேலும் 14 பேர் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவர்: ஐஜிபி
March 19, 2026, 12:48 pm
தமீம் டஹாரி புனித பூமியில் இருப்பதாக நம்பப்படுகிறது: ஐஜிபி
March 19, 2026, 11:27 am
ஆண் குழந்தை கொலை குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாக குழந்தைகள் பராமரிப்புப் பணியாளர் தலையசைந்தார்
March 19, 2026, 11:26 am
சுங்கை பூலோ மக்களுக்காக 8 லட்சம் ரிங்கிட் சம்பளம் நன்கொடை: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்
March 19, 2026, 11:25 am
மேற்கு ஆசிய மோதல் பகுதிகளில் இருந்து மலேசியர்களை வெளியேற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது
March 19, 2026, 11:24 am
பாஸ் கட்சியைச் சந்தித்ததை பகாங் மஇகா மறுத்துள்ளது
March 19, 2026, 11:06 am
