நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆண் குழந்தை கொலை குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாக குழந்தைகள் பராமரிப்புப் பணியாளர் தலையசைந்தார்

ஜார்ஜ்டவுன்:

கடந்த மார்ச் 9 அன்று நான்கு மாத ஆண் குழந்தையைக் கொலை செய்ததாக, இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குழந்தை பராமரிப்புப் பணியாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரான 22 வயதான நூர் ஃபர்ஹானா, மாஜிஸ்திரேட் நூருல் ரஷீதா முகமது அகித் முன்னிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, ​​புரிந்துகொண்டு தலையசைத்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றச்சாட்டின்படி, 29 வயதான உம்மு ஹபீபா வஹாப் என்பவரின் குழந்தையின் மரணத்தை ஏற்படுத்தி கொலை செய்ததாக அந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இங்குள்ள செபராங் ஜெயா மருத்துவமனையில் உள்ள ஸ்மார்ட் பகல்நேரப் பராமரிப்பு மையத்தில், மார்ச் 9 அன்று அதிகாலை 1 மணி முதல் 4 மணிக்குள் இந்தக் குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்தக் குற்றத்திற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாமலும் 40 ஆண்டுகளுக்கு மிகாமலும் சிறைத்தண்டனையும், 12 பிரம்படிகளுக்குக் குறையாமலும் விதிக்கப்படும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset