செய்திகள் இந்தியா
கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்: ஒரு மரத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வாங்கிய விவசாயி மர்ம முறையில் மரணம்
கர்நாடகா:
தனது விளைநிலத்தில் இருந்த ஒரே ஒரு மரத்திற்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரிப் போராடிய கர்நாடக விவசாயி, முதற்கட்டமாக 50 லட்ச ரூபாயைப் பெற்ற சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், அந்த மரத்தின் மதிப்பைக் கணக்கிடுவதில் நிலவிய சர்ச்சையே இந்த வழக்கின் மையப்புள்ளியாக உள்ளது.
விசாரணையில், பாதிக்கப்பட்ட விவசாயியின் நிலத்தில் இருந்த விலைமதிப்பற்ற மரம் ஒன்று ரயில்வே பாதை அமைக்கும் பணிகளுக்காக அகற்றப்பட்டது. இதற்கு முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை என அவர் நீதிமன்றத்தை நாடினார்.
அந்த மரத்தின் அபூர்வத் தன்மை, அதன் பொருளாதார மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நீதிமன்ற உத்தரவின்படி, முதற்கட்டமாக 50 லட்சம் ரூபாய் அவரது வங்கித் கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால், பணத்தைப் பெற்ற சில நாட்களிலேயே அந்த விவசாயி திடீரென மரணமடைந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், மரத்திற்கான இழப்பீட்டுத் தொகையை முறையாகக் கணக்கிட்டு வழங்கியதாகத் தெரிவித்துள்ளது.
"மீதமுள்ள தொகையை வழங்குவதற்கான நடைமுறைகள் பரிசீலனையில் இருந்த நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது" என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது அந்த விவசாயியின் வாரிசுகள் மீதித் தொகையைப் பெறுவதற்கான சட்டப் போராட்டத்தைத் தொடர முடிவெடுத்துள்ளனர். ஒரு மரத்திற்காக இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாக வழங்கப்படுவதும், அதைத் தொடர்ந்து நடந்த மரணமும் அந்தப் பகுதியில் விவாதப் பொருளாகியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
