செய்திகள் இந்தியா
திருநங்கை சட்டத்திருத்ததில் கடும் சர்ச்சை: மசோதாவிற்கு எதிராக பலர் எதிர்ப்பு
டெல்லி:
இந்தியாவில் திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
திருநங்கைகளின் வாழ்வாதாரம் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டாலும், இதில் உள்ள சில அம்சங்கள் தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் திருநங்கையர் சமூகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்புவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது 'பாலின அடையாளச் சான்றிதழ்' பெறும் நடைமுறைதான். ஒருவர் தன்னைத் திருநங்கை என்று அடையாளப்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்துச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனை, ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், அறுவை சிகிச்சை செய்துகொண்டால் மட்டுமே 'ஆண்' அல்லது 'பெண்' என்ற அடையாளத்தைப் பெற முடியும் என்ற நிபந்தனை, ஒருவரின் சுய விருப்பத்திற்கு எதிரானது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள், மற்றவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை விடக் குறைவாக இருப்பது மற்றொரு முக்கியப் புகாராகும்.
பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களுக்குத் திருநங்கையர் சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச தண்டனையே வழங்கப்படுவது, பாரபட்சமான அணுகுமுறை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சட்டத்திருத்தம் தங்களைச் சமூகத்தில் சமமாக நடத்த வழிவகுப்பதற்குப் பதிலாக, மேலும் அந்நியப்படுத்துவதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
