செய்திகள் இந்தியா
டாக்டர் வந்தனா கொலை வழக்கில் நீதி நிலைநிறுத்தப்பட்டது
புது டெல்லி:
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவமான டாக்டர் வந்தனா தாஸ் கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் வரும் வியாழக்கிழமை (மார்ச் 19) அறிவிக்கப்படும்.
கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) இந்தத் தீர்ப்பை வழங்கியது.
2023 மே 10 அதிகாலை, கேரளாவின் கொட்டாரக்கரா அரசு தாலுக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலிசாரால் கொண்டு வரப்பட்ட கைதி ஒருவரால் டாக்டர் வந்தனா தாஸ் குத்திக்கொல்லப்பட்டார்.
குற்றவாளி எஸ். சந்தீப், அதே நாளில் அதிகாலை சுமார் 4 மணியளவில் அந்த மருத்துவரைக் குத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், காயமடைந்த வந்தனா தாஸ் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தார்.
வந்தனா தாஸ், கொல்லம் மாவட்டத்தில் உள்ள அசீசியா மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனத்தில் MBBS படிப்பை முடித்தவர். அவர் கொட்டாரக்கரா தாலுக் மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜென்சியாக பணியாற்றி வந்தார்.
42 வயதான குற்றவாளி எஸ். சந்தீப், ஒரு மேல்நிலை ஆரம்பப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் மருத்துவமனையில் மருத்துவர் உட்பட மேலும் நான்கு பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அவரை சிகிச்சைக்காக கொண்டு வந்த போலிஸ் அதிகாரிகளும் அடங்குவர்.
2023 மே 9 இரவு, குடும்ப உறுப்பினர்களைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலிசார் அவரை வீட்டில் கைது செய்தனர்.
குற்றவாளியின் காலில் சிறிய காயம் ஏற்பட்டிருந்ததால், அவசியமான மருத்துவ பரிசோதனைக்காக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, எந்தத் தூண்டுதலும் இன்றி அவர் திடீரென வன்முறையில் ஈடுபட்டு, மருத்துவர் வந்தனாவைக் குத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
