செய்திகள் இந்தியா
பில்லி சூனியம் அதிர்ச்சி சம்பவம்: மூடநம்பிக்கைக்குப் பலியான 3 உயிர்கள்
ஜார்கண்ட்:
ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் பில்லி சூனியம் வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த லுத்ரு முர்மு (55), அவரது மனைவி மாலி கிஸ்கு (50), அவர்களது மகன் பப்லு முர்மு (25) ஆகிய மூவருமே இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர், இந்தக் குடும்பத்தினர் பில்லி சூனியம் செய்ததாகக் குற்றம் சாட்டி, ஆத்திரத்தில் அரிவாள், கூர்மையான ஆயுதங்களால் அவர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலிசார், தலைமறைவாக உள்ள கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
காவல்துறையினர் ஒரு சிலரைச் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நவீன காலத்தில் இன்னும் இத்தகைய மூடநம்பிக்கைகளால் உயிர்ப்பலிகள் ஏற்படுவது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
