செய்திகள் இந்தியா
விமானங்களில் 60 சதவீத இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது: இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை
மும்பை:
விமானங்களில் 60 சதவீத இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
உலகளவில் உள்நாட்டு விமானப் பயணிகளை கையாளுவதில் இந்தியா மூன்றாவது நாடாக இருக்கின்றது. இந்திய விமான நிலையங்கள் நாளொன்றுக்கு 5 லட்சம் பயணிகளை கையாண்டு வருகின்றன.
விமானங்களில் பயணம் செய்ய ஜன்னல் இருக்கைகள், முன்பக்க இருக்கைகள் போன்றவற்றை தேர்வு செய்வதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலித்து வருகின்றன.
இந்த நிலையில், அனைத்து விமானங்களிலும் 60 சதவீத இருக்கைகளை தேர்வு செய்வதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒன்றாக பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒன்றாக இருக்கைகளை ஒதுக்கீடு செய்யவும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “விளையாட்டு உபகரணங்கள், இசைக் கருவிகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கு செயல்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு உகந்த வசதிகளை செய்து தரவேண்டும். செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு செல்வதற்கான வெளிப்படையான கொள்கைகளை நிறுவனங்கள் வெளியிட வேண்டும்.
விமான நிறுவனங்களின் இணையதளங்கள், மொபைல் செயலிகள், முன்பதிவுத் தளங்கள், விமான நிலைய கவுண்டர்கள் முழுவதும் பயணிகளின் உரிமைகளை உள்ளூர் மொழிகளில் தெளிவாகக் காட்சிப்படுத்துதல் வேண்டும்” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
