செய்திகள் மலேசியா
மேற்காசிய பதற்றம் தாக்கம்: மலேசிய எரிசக்தி செலவில் அழுத்தம்
கோலாலம்பூர்:
உலக எரிசக்தி சந்தையின் மாற்றங்களால், எண்ணெய், எரிவாயு உற்பத்தியாளராக இருந்தாலும், மலேசியா தற்போது உலகளாவிய விலை மாற்றங்களுக்கு நேரடியாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.
குறிப்பாக அமெரிக்கா–ஈரான் மோதல் அதிகரித்துள்ளதால் இந்த பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.
பெட்ரோனாஸ் டகாங்கான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஸ்ருல் உஸ்மான் ராணி தெரிவித்ததாவது, மலேசியா தற்போது மூல எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக மாறியுள்ளது.
கடந்த காலத்தில் தினசரி 700,000 பீப்பாய்கள் உற்பத்தி செய்த நிலையில், இன்று அது சுமார் 350,000 பீப்பாய்களாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் தேவைகள் அதிகரித்துள்ளன.
மேலும், நாட்டின் சுத்திகரிப்பு நிலையங்கள் மேற்காசிய பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கனமான மூல எண்ணெய்களைச் செயலாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனால் ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றம், எரிசக்தி விநியோகத்தையும் செலவையும் நேரடியாக பாதிக்கிறது.
இந்த சூழ்நிலையில், மாற்று ஆதாரங்களை தொலைதூர பகுதிகளில் தேட வேண்டிய நிலை உருவாகி, கடல் போக்குவரத்து செலவு, காப்பீட்டு கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
இதன் விளைவாக, உலக சந்தையில் எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 அமெரிக்க டாலரிலிருந்து 100 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது. இந்த உயர்வு, மலேசியாவின் எரிபொருள் செலவுகளிலும் தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 2:05 pm
மழலையர் காப்பகத்தில் 4 மாதக் குழந்தை மரணம்; மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம்: போலிஸ்
March 18, 2026, 2:05 pm
தோமி தோமஸுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கை மீண்டும் தொடர நஜிப் மனு தாக்கல்
March 18, 2026, 2:03 pm
தொழிற்சங்கப் போராட்டத்தில் நான் எப்போதும் தொழிலாளர்களுடன் தான் இருப்பேன்: ஸ்டீவன் சிம்
March 18, 2026, 12:57 pm
“வாடகை கட்ட வழியில்லை": காதலியுடன் சேர்ந்து திருடிய ஆடவருக்குச் சிறை
March 18, 2026, 12:23 pm
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய இந்தோனேசிய ஆடவர் மீது வழக்கு
March 18, 2026, 12:11 pm
இரண்டு வாகனங்கள் மோதியதில் பெண் குழந்தை உயிரிழந்தது
March 18, 2026, 12:10 pm
வளைகுடாப் போர்: உணவுப் பொருட்கள் விலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
March 18, 2026, 12:08 pm
