நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோன் கார் விற்பனை கும்பல் முறியடிப்பு; 1.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கார்கள் பறிமுதல்: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

குளோன் கார் விற்பனை கும்பல் முறியடிக்கப்பட்டதுடன்  1.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

வாங்குபவர்களை ஏமாற்றுவதற்காக சட்டப்பூர்வமான ஆவணங்களைப் பயன்படுத்திய கார் விற்பனை சமீபத்தில் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் பிடிபட்டது.

கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாகச் சேகரிக்கப்பட்ட உளவுத் தகவல்களின் விளைவாகவே மார்ச் 12 முதல் 15 வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

33 முதல் 60 வயதுக்குட்பட்ட 10 ஆண்கள், இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 12 உள்ளூர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாங்குபவர்கள், இடைத்தரகர்கள், விற்பனையாளர்கள் அல்லது முகவர்கள் என மூன்று அடுக்குகளாக அவர்கள் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கையில் சுமார் 1.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மொத்தம் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தத்தில், எட்டு வாகனங்கள் போலியாக உருவாக்கப்பட்டவை அல்லது அவற்றின் அடையாளங்கள் போலியாக உருவாக்கப்பட்டவை எனக் கண்டறியப்பட்டன.

மற்ற நான்கு வாகனங்கள் சிங்கப்பூரிலிருந்து திருடப்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த ஒரு சந்தேக நபர் மார்ச் 16 அன்று ஒப்படைக்கப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கும்பலின் செயல்பாட்டு முறை குறித்துக் கருத்து தெரிவித்த குமார், திருடப்பட்ட வாகனம் அல்லது 'முழுமையாகப் பழுதடைந்தது' என அறிவிக்கப்பட்ட வாகனத்தின் அடையாளத்தைப் பயன்படுத்தி, அதன் சேசிஸ் மற்றும் இன்ஜின் எண்களை இந்தக் கும்பல் மாற்றியமைத்துள்ளது.

மேலும், வாகனங்கள் உண்மையானவை போலத் தோற்றமளிக்க, அவர்கள் வாகனப் பதிவுத் தரவுகளைத் திரித்து, புதிய எண் பட்டையை பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset