நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகங்கள், கேட்டரிங், பேக்கரி தொழிலாளர்களைக் குறிவைத்து பெரிய ஆர்டர்கள் பெயரில் மோசடி வலை

கோப்பெங்: 

இந்த ஆண்டில் ராயா பலகாரங்கள், விருந்துணவு ஆர்டர்களைச் சார்ந்த ஏழு மோசடி சம்பவங்களைப் பேராக் போலிஸ் கண்டறிந்துள்ளது. இதனால் மொத்த இழப்பு RM300,000க்கு நெருங்கியுள்ளது.

இந்த மோசடி கும்பல், பெரிய அளவில் ஆர்டர்கள் செய்வதன் மூலம் உணவகங்கள், கேட்டரிங், பேக்கரி தொழிலாளர்களைக் குறிவைத்து பெரிய அளவில் ஆர்டர்கள் செய்கின்றனர் என்று பேராக் மாநில போலிஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் முதலில் கேட்டரிங் ஆர்டர் செய்வதுடன், பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் தயாரிக்காத பொருட்களையும் கேட்டு ஆர்டர் செய்கின்றனர். அதன் பின்னர், அந்த பொருட்களை வழங்க முடியும் எனக் கூறப்படும் மூன்றாம் நபரின் தொடர்பு எண்ணை வழங்குகின்றனர்.

“சந்தேகநபர்கள், பாதிக்கப்பட்டவர் தயாரிக்க முடியாத பொருட்களைத் தேர்வு செய்து, உதாரணமாக ‘கெரிஸ்’ போன்ற பொருட்களை கேட்பார்கள். பின்னர், அதை வழங்க முடியும் எனக் கூறி மற்றொரு நபரின் எண்ணை தருவார்கள்.

“அந்த எண் உண்மையில் மோசடி கும்பலின் தொடர்பு எண்ணாகும். பணம் செலுத்திய பிறகே பாதிக்கப்பட்டவர் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்.

“இத்தகைய சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர் தயாரித்த உணவுக்கான இழப்பு, மற்றொன்று மூன்றாம் நபருக்கு செலுத்திய பண இழப்பு என இரட்டை இழப்பைச் சந்திக்கிறார்,” என அவர் கூறினார்.

பேராக் கிராமப்புற மாற்ற மையத்தில் நடைபெற்ற ‘Op Selamat 26’ தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் இதை தெரிவித்தார்.

இந்த மோசடி நடைமுறை கடந்த ஆண்டிலிருந்தே கண்டறியப்பட்டதாகவும், அப்போது 66 சம்பவங்கள் பதிவாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset