செய்திகள் மலேசியா
தோமி தோமஸுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கை மீண்டும் தொடர நஜிப் மனு தாக்கல்
புத்ராஜெயா:
முன்னாள் தலைமை வழக்கறிஞர் தோமி தோமஸுக்கு எதிரான தனது 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கை மீண்டும் தொடர, கூட்டரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இறுதி நடவடிக்கையை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் எடுத்துள்ளார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் முடிவை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, நஜிப் கடந்த மாதம் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
நஜிப்பின் சட்டக் குழுவில் உறுப்பினராக உள்ள வழக்கறிஞர் யுதிஸ்திரா தர்மா தோர்,
கூட்டரசு நீதிமன்றத்தில் அனுமதி கோருவதற்காக மூன்று சட்டக் கேள்விகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் அவர் கூறினார்.
நஜிப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளுக்கு எதிரான தாக்குதல் அல்ல இந்த உரிமையியல் நடவடிக்கை என்று அவர் வலியுறுத்தினார்.
தோமஸ் தலைமை வழக்கறிஞராக ஆவதற்கு முன்பும், அப்போதும், அதற்குப் பிறகும் நஜிப் ரசாக் தொடர்பாக முன்னாள் தலைமை வழக்கறிஞரின் நடவடிக்கைகள், நடத்தை மற்றும் அலட்சியம் குறித்த எனது கட்சிக்காரரின் குற்றச்சாட்டுகளுடன் இது தொடர்புடையது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 3:11 pm
சாலைகளை ‘குப்பைத்தொட்டி’ ஆக்க வேண்டாம்: கோர் மிங் எச்சரிக்கை
March 18, 2026, 3:10 pm
நாட்டின் மிகப்பெரிய இணையம் வழி உயர் கல்வி நிகழ்வு
March 18, 2026, 3:09 pm
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச வீடமைப்பு திட்டம்: பெர்லிஸ் மாநில அரசு அறிவிப்பு
March 18, 2026, 3:08 pm
தனிமையில் சிக்கிய நபர் மீதான விசாரணை பாலியல் பலாத்கார வழக்காக மாறியது
March 18, 2026, 3:07 pm
நிச்சயதார்த்தப் பெண்ணைத் தாக்கிய ஆடவருக்கு RM1,500 ரிங்கிட் அபராதம்
March 18, 2026, 2:05 pm
மழலையர் காப்பகத்தில் 4 மாதக் குழந்தை மரணம்; மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம்: போலிஸ்
March 18, 2026, 2:03 pm
