செய்திகள் மலேசியா
ஆலய நிர்வாகத்தை நேரில் சந்தித்து பேசத் தயார்; மூன்றாம் தரப்பினரை நம்பி ஏமாற வேண்டாம்: பாப்பா ராயுடு
கிள்ளான்:
ஆலய நிர்வாகத்தை நேரில் சந்தித்து பேச தயார். மூன்றாம் தரப்பினரை நம்பி ஏமாற வேண்டாம்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு இதனை கூறினார்.
ஆலயம் நிலம் தொடர்பான விவகாரங்களில், ஆலய நிர்வாகத்தினரை நேரில் சந்தித்து பேசத் தயாராக உள்ளேன்.
ஒவ்வொரு நாளும், ஆலய நிர்வாகங்களுடன் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கின்றது.
மேலும், அண்மையில் கோல லங்காட் மலேசிய இந்து சங்கம் மூலமாக 26 ஆலயம் தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பினர் தலையீடு செய்து, தங்களின் சுயலாபத்திற்காக ஆலயங்களை மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி வருகின்றனர்.
இதனால் ஆலயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண இயலாத நிலை உருவாகிறது. அவர்கள் இதனை விளம்பரப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகையால் ஆலயம் தொடர்பான எந்தவொரு விவகாரத்திற்கும், ஆலய நிர்வாகத்தின் தலைவர் அல்லது செயலாளர், அல்லது மலேசிய இந்து சங்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மூலமாக நேரடியாக சந்திக்க வருவது சிறந்ததாகும்.
விளம்பர நோக்கத்துடன் செயல்படும் மூன்றாம் தரப்பினரின் ஈடுபாடு வேண்டாம். மேலும், இவ்வாறான மூன்றாம் தரப்பினரை நம்பி ஆலய நிர்வாகத்தினர் ஏமாற வேண்டாம் என்று பாப்பா ராயுடு கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 3:11 pm
சாலைகளை ‘குப்பைத்தொட்டி’ ஆக்க வேண்டாம்: கோர் மிங் எச்சரிக்கை
March 18, 2026, 3:10 pm
நாட்டின் மிகப்பெரிய இணையம் வழி உயர் கல்வி நிகழ்வு
March 18, 2026, 3:09 pm
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச வீடமைப்பு திட்டம்: பெர்லிஸ் மாநில அரசு அறிவிப்பு
March 18, 2026, 3:08 pm
தனிமையில் சிக்கிய நபர் மீதான விசாரணை பாலியல் பலாத்கார வழக்காக மாறியது
March 18, 2026, 3:07 pm
நிச்சயதார்த்தப் பெண்ணைத் தாக்கிய ஆடவருக்கு RM1,500 ரிங்கிட் அபராதம்
March 18, 2026, 2:05 pm
மழலையர் காப்பகத்தில் 4 மாதக் குழந்தை மரணம்; மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம்: போலிஸ்
March 18, 2026, 2:05 pm
தோமி தோமஸுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கை மீண்டும் தொடர நஜிப் மனு தாக்கல்
March 18, 2026, 2:03 pm
