நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“வாடகை கட்ட வழியில்லை": காதலியுடன் சேர்ந்து திருடிய ஆடவருக்குச் சிறை

பத்து பஹாட்: 

வாடகை கார், வீட்டு வாடகையைச் செலுத்தப் பணம் தேவைப்பட்டதால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வேலையற்ற மலேசிய ஆடவருக்கும், அவரது இந்தோனேசிய காதலிக்கும் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

39 வயதுடைய முஹம்மத் கைருல், 34 வயதுடைய மிலா ஃபிர்தௌஸ் சுமிட்டோ ஆகிய இருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில் ஒப்புக்கொண்டனர்.

கடந்த ஜனவரி 12-ஆம் தேதி காலை 9:20 மணியளவில், பாரிட் ராஜா பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் கைபேசி, காலணிகளைத் திருடியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கார், வீட்டு வாடகைக்காகத் தினசரி 250 ரிங்கிட் தேவைப்பட்டதால் இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக முஹம்மத் கைருல் வாக்குமூலம் அளித்துள்ளார். 

மேலும், இந்தோனேசியப் பெண்ணான மிலா ஃபிர்தௌஸ், முறையான நுழைவு அனுமதி இன்றி நாட்டில் தங்கியிருந்தது, போதைப்பொருள் பயன்படுத்தியது ஆகிய கூடுதல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளார்.

வழக்கை விசாரித்த மஜிஸ்திரேட், திருட்டுக் குற்றத்திற்காக இருவருக்கும் தலா நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார். குடிநுழைவுச் சட்டத்தை மீறியதற்காக மிலாவிற்கு மேலும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset