நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிற்சங்கப் போராட்டத்தில் நான் எப்போதும் தொழிலாளர்களுடன் தான் இருப்பேன்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

நீதிமன்றத்தில் நடைபெறும் தொழிற்சங்கப் போராட்டங்களின்போது, ​​நான் எப்போதும் தொழிலாளர்களின் பக்கமே நிற்பேன்.

முன்னாள் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை வலியுறுத்தினார்.

அரசாங்கத்தில் தனது செயல்பாடுகள், தொழிலாளர்களுக்கு ஆதரவான ஒரு நிலையான அணுகுமுறையைக் காட்டுகிறது.

எனது நிலைப்பாடு மிகவும் தெளிவானது. அமைச்சில் பணியாற்றிய காலத்திலிருந்து, கொள்கை, திட்டங்கள் அல்லது சட்டம் என எதுவாக இருந்தாலும், நான் செய்தவற்றின் மூலம் எனது நிலைப்பாடு தெளிவாகவும் நிரூபிக்கப்பட்டும்.

நாங்கள் தொழிலாளர்களின் பக்கமே இருக்கிறோம். அது மிகவும் தெளிவானது, என்று ஜசெகவின் 60ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்திற்கு பிறகு அவர் கூறினார்.

என்னை பொறுத்தவரை, இந்த நிலைப்பாடு சில முதலாளிகளிடமிருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

உண்மையில், நான் தொழிலாளர்களின் பக்கம் மிகவும் அதிகமாகச் சாய்வதாக சில முதலாளிகள் புகார் கூறியுள்ளனர்.

இந்தப் போராட்டம் தொடர்பான தற்போதைய சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று  தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு  அமைச்சரான ஸ்டீவம் சிம் கூறினார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.எனவே நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எனது நிலைப்பாடு தெளிவாக உள்ளது.

மக்களின், குறிப்பாக பெரும்பான்மையினரின், அதிலும் குறிப்பாக தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதே அது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset