நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டு வாகனங்கள் மோதியதில் பெண் குழந்தை உயிரிழந்தது

தானா மேரா:

மகா மச்சாங் – தானா மேரா சாலையில் உள்ள பண்டார் பாரு தானா பகுதியில், இரண்டு வாகனங்கள் மோதியதில் ஒரு பெண் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தச் சம்பவம் இன்று காலை 4.20 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்ததுடன் நான்கு பேர் காப்பாற்றப்பட்டனர்.

தானா மேரா தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் இயக்குனர் ஹம்தான் அப்துல்லா, காலை 4.35 மணியளவில் தமது தரப்புக்குச் சம்பவம் பற்றிய அழைப்பு வந்ததாகக் கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஏழு தீயணைப்பு வீரர்களும் அதிகாரிகளும் 'Perodua Myvi', 'BMW 5 Series' வகை கார்களுக்கிடையில் விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவித்தனர்.

"இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை அனைவரையும் வாகனங்களில் இருந்து வெளியேற்றினோம். ஒரு பெண், ஒரு பெண் குழந்தை உயிரிழந்தனர்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

காயமடைந்தவர்கள் சுகாதாரத் துறையிடம் (KKM) ஒப்படைக்கப்பட்டதுடன் உயிரிழந்தோர் மேலதிக விசாரணைக்காக போலிசாரிடம் கொடுக்கப்பட்டனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset