செய்திகள் மலேசியா
ரமலானில் மாற்று நடைமுறை: உணவுக்கு பதில் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய அர்-ரஹ்மான் பள்ளிவாசல்
ஷா ஆலம்:
கெடா மாநிலத்தின் கெர்பான் பகுதியில் உள்ள அர்-ரஹ்மான் பள்ளிவாசலில், ரமலான் மாதத்தில் வழக்கமான உணவு வழங்குதலுக்கு பதிலாக சமையல் பொருட்கள் ‘மோரே’யாக வழங்கப்படும் புதிய நடைமுறை சமூகத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
பள்ளிவாசல் செயலாளர் சப்ரி சியாஃபி தெரிவித்ததாவது, தராவீஹ் தொழுகைக்குப் பிறகு இரவு நேரம் தாமதமாக இருப்பதால் உணவு வீணாகும் நிலை ஏற்பட்டது.
இதனால், சர்க்கரை, சோயா சாஸ், பால் உள்ளிட்ட அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்கும் முறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறினார்.
இந்த பொருட்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடியவை என்பதால், மக்களுக்கு அதிக பயன் அளிப்பதாகவும் அவர் விளக்கினார். இந்த நடைமுறை 2000-ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்தே சமூகத் தேவைக்கு ஏற்ப அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தனித்துவமான ‘மோரே’ வழங்கல் தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 2:05 pm
மழலையர் காப்பகத்தில் 4 மாதக் குழந்தை மரணம்; மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம்: போலிஸ்
March 18, 2026, 2:05 pm
தோமி தோமஸுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கை மீண்டும் தொடர நஜிப் மனு தாக்கல்
March 18, 2026, 2:03 pm
தொழிற்சங்கப் போராட்டத்தில் நான் எப்போதும் தொழிலாளர்களுடன் தான் இருப்பேன்: ஸ்டீவன் சிம்
March 18, 2026, 12:57 pm
“வாடகை கட்ட வழியில்லை": காதலியுடன் சேர்ந்து திருடிய ஆடவருக்குச் சிறை
March 18, 2026, 12:23 pm
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய இந்தோனேசிய ஆடவர் மீது வழக்கு
March 18, 2026, 12:11 pm
இரண்டு வாகனங்கள் மோதியதில் பெண் குழந்தை உயிரிழந்தது
March 18, 2026, 12:10 pm
வளைகுடாப் போர்: உணவுப் பொருட்கள் விலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
March 18, 2026, 12:08 pm
