செய்திகள் மலேசியா
நோன்பு பெருநாளுக்கு 50 சதவீதம் டோல் கட்டணம் தள்ளுபடி
கோலாலம்பூர்:
எதிர்வரும் நோன்பு பெருநாளை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான பயணச் செலவைக் குறைக்க உதவும் வகையில் அரசாங்கம் 50 சதவீத டோல் கட்டணத் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
நெடுஞ்சாலை சலுகைதாரருக்கு இழப்பீடாக 21.03 மில்லியன் ரிங்கிட் நிதிப் பொறுப்பை இந்த முயற்சி உள்ளடக்கியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்தச் சலுகை 2026 மார்ச் 18 புதன்கிழமை காலை 12.01 மணிமுதல், மார்ச் 19 வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணி வரை அமல்படுத்தப்படும்.
மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது வழி நெடுஞ்சாலையில் (லிங்க் டுவா) உள்ள பங்குணான் சுல்தான் இஸ்கந்தர் (பிஎஸ்ஐ) சுங்கச்சாவடி, தஞ்சோங் குப்பாங் சுங்கச்சாவடி ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்து நெடுஞ்சாலைகளிலும் முதல் வகுப்பு தனியார் வாகனங்கள் இதற்குப் பொருந்தும் என்று அவர் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார், மக்களின் சுமையைக் குறைப்பதற்கும், பெருநாள் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பும் பயணம் சுமூகமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் அரசு எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியே இந்தத் தள்ளுபடி என்று கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 5:18 pm
கடன் சுமை இல்லா ஹரி ராயா: 4,000 பேருக்கு விரைவு திவால் நிவாரணம்
March 17, 2026, 5:16 pm
சுற்றுலா துறையில் மலேசியா முன்னேற்றம்: VM2026க்காக ஒருங்கிணைந்த முயற்சி
March 17, 2026, 5:10 pm
மாற்றுத்திறனாளி பெண் ஊழியரைத் தாக்கிய சமூக ஊடகப் பிரபலத்துக்கு RM2000 ரிங்கிட் அபராதம்
March 17, 2026, 5:08 pm
கோத்தா பாரு - கோம்பாக் இடையிலான இரயில் பாதை பணிகள் முன்கூட்டியே நிறைவு
March 17, 2026, 5:07 pm
டீசல் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி: சபா, சரவாக்கில் மானிய முறையை மாற்றியமைக்க மலேசிய அரசு தீவிரம்
March 17, 2026, 5:05 pm
“மலேசிய உள்நாட்டுச் சுற்றுலாவில் அதிரடி வளர்ச்சி”: புள்ளிவிவரத் துறை அதிகாரி உசிர் மஹிதின்
March 17, 2026, 5:02 pm
