நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அருண் துரைசாமிக்கு ஆதரவளிக்க குலசேகரன் நீதிமன்றம் வந்தாரா? துணை அமைச்சரின் நீதிமன்ற வருகை பேசுபொருளானது: பொது பார்வை குறித்து PKR கவலை

கோலாலம்பூர்: 

பிரதமர் துறையின் துணை அமைச்சரான எம். குலசேகரன், அருண் துரைசாமியின் வழக்கு விசாரணை நடைபெறும் நேரத்தில் நீதிமன்ற அறையில் தாம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

பினாங்கில் இருந்து திரும்பியபோது, ஜாவி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற வளாகத்தின் வெளியே அருணைச் சந்தித்து, அவருக்கு ஊக்கமளித்து சட்ட நடைமுறையில் நம்பிக்கை வைக்குமாறு அறிவுறுத்தியதாக குலசேகரன் தெரிவித்தார்.

மேலும், இந்திரா காந்தியின் குழந்தைகள் தொடர்பான முந்தைய வழக்கில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்திய காலத்திலிருந்தே அருணை அறிந்திருப்பதாகவும் கூறினார்.

மேலும், குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோதும், விசாரணை நடைபெற்றபோதும் தாம் நீதிமன்ற அறைக்குள் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு முன்பு, PKR கட்சியின் மத ஒற்றுமை, வலுவூட்டல் பிரிவு, அருணுடன் நீதிமன்றத்தில் குலசேகரன் இருந்தது குறித்து விளக்கம் கோரியது.

அந்த பிரிவின் தலைவர் அமிடி அப்துல் மனான், துணை அமைச்சரின் வருகை, அது தனிப்பட்ட வகையிலானதாக இருந்தாலும் பலவிதமான கருத்துக்களை உருவாக்கக்கூடும் என்றும், அது அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள பார்வையைப் பாதிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset