நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடன் சுமை இல்லா ஹரி ராயா: 4,000 பேருக்கு விரைவு திவால் நிவாரணம் 

புத்ராஜெயா: 

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவிப்பின் பேரில், மலேசிய திவால் துறை (Malaysian Insolvency Department) 4,000 பேருக்கு விரைவு முறையில் திவால் நிவாரணம் வழங்கும் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ளது என தொடர்பு துறை அமைச்சரான டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறிப்பாக தனித்து வாழும் தந்தை அல்லது தாய்மார்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் கடன்சுமையின்றி பண்டிகையை எதிர்கொள்ளவும், புதிய தொடக்கத்தை உருவாக்கவும் உதவுவதே இந்த முயற்சியின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன், பிப்ரவரி 16 அன்று அரசு “Second Chance Fast Track Policy” எனப்படும் கொள்கையைத் தனித்து வாழும் பெற்றோர், சிறு கடன் தொழில்முனைவோர், நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்ட வீட்டு திட்டங்களால் பாதிக்கப்பட்ட வீட்டு கடன் பெறுநர்கள் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

“இந்த விரைவு திட்டம் பெயர் மாற்றம் மட்டுமல்ல,” என்று அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசலினா ஒத்மான் சயீத் தெரிவித்தார். இது மனிதநேய அணுகுமுறையுடன் கடன் சுமையிலிருந்து மக்களை மீட்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.

இது மலேசியா மடானி கொள்கையின் கருணை, அக்கறை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“நிதிச் சரிவு வாழ்க்கையின் முடிவு அல்ல,” என்று அவர் வலியுறுத்தினார். 

நியாயமான, திறம்பட செயல்படும், மனிதநேயமான அமைப்பின் மூலம் இந்த முயற்சி பலருக்குப் புதிய மாற்றத் துவக்கமாக அமையும் என்றார் அவர்.

மேலும், மலேசிய திவால் துறை சமீப கால சாதனைகளையும் அவர் எடுத்துக்காட்டினார். 2024ஆம் ஆண்டு 176,851 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டில் 204,487 வழக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மொத்தமாக 381,000க்கும் மேற்பட்டோர் புதிய வாழ்க்கை தொடங்க வாய்ப்பு பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset