செய்திகள் மலேசியா
பொது சேவையாளர்களுக்கு “வீட்டில் இருந்து பணியாற்றுதல்” BDR? ஆலோசனைகள் தொடக்கம்
சிலாயாங்:
சிலாங்கூர் அரசு, “வீட்டில் இருந்து பணியாற்றுதல்” (BDR) யோசனையை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பை மறுக்கவில்லை என்றாலும் அதற்கு முன் விரிவான ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செயல்முறை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவது, அது எத்தனை நிலைகளில் பொருந்தும் என்பதனை ஆராய்வது முக்கியம் என்று மாநில மகளிர் மேம்பாடு, சமூக நலக் குழுவின் தலைவர் அன்பால் சாரி தெரிவித்துள்ளார்.
“இந்த வாய்ப்பை மறுக்கவில்லை; ஆனால் பரிசீலனை செய்து, நிலைமைக்கு ஏற்றதாக செயல்படுத்துவோம். இது ஒரே நாளில் அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படமாட்டாது,” என்றார் அவர் இன்று பண்டார் பாரு சிலாயாங்கில் உள்ள டதரன் இல்முவில் நடைப்பெற்ற ப்ரீ-சியாவல் அக்ரோ மடானி (ஜேம்) விற்பனைத் திட்டத்தை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
BDR-ஐ நடைமுறைப்படுத்துவதில் சில சவால்கள் இருப்பதாகவும், அது 2020 ஆம் ஆண்டில் COVID-19 காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) போலிருக்கும் எனவும் தாமான் டெம்ப்ளருக்கான மாநில சட்டமன்ற உறுப்பினருமான (ADUN) அவர் குறிப்பிட்டார்.
“இந்த முறையை நுணுக்கமாக பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் இது பணிமுறை மாற்றங்கள், நாட்டின், மாநிலத்தின் தயாரிப்பு நிலை, எண்ணெய் விலை உயர்வு போன்ற நீடித்த நெருக்கடிகள் ஏற்பட்டால் ஏற்படும் விளைவுகளை நிர்வகிப்பதில் முக்கியமானது.
மேலும், எந்த பணித்துறை அதாவது ஆதரவு, மேலாண்மை அல்லது உயர்துறை இதற்கு பொருத்தமானது என்பதையும் கவனித்தல் கொள்ளுதல் அவசியமாகும். இதனால் ஒருமைப்பாடு பேணப்படுவதோடு, செயல்திறன் தொடர்ச்சியாகும்.”
“வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகள் BDR-ஐ முன்மொழிந்துள்ளன; ஆனால் இது பொதுச் சேவையாளர் பணியாளர்களுக்கு ஏற்படும் விளைவுகளை நன்கு புரிந்துகொள்வது முக்கியம்,” என்றார் அவர்.
முன்னதாக, அரசு பணியாளர்கள் BDR மூலம் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற யோசனை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அதையடுத்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தற்போது மாநில தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்ஸுல் அஸ்ரீ அபு பக்கர், பொது சேவை இயக்குனர் தான் ஸ்ரீ வான் அஹம்மத் டஹ்லான் அப்துல் அஸீஸ் அவர்களிடம் இந்த யோசனையை ஆராய்ந்து முன்மொழியுமாறு பணித்துள்ளார் என்று அரசு ஊடக பிரதிநிதி டத்தோ ஃபஹ்மி பட்ஸில் தெரிவித்துள்ளார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 4:26 pm
சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது
March 16, 2026, 4:25 pm
புத்ராஜெயா மதீனத்துல் குர்ஆன் மையம்: பிராந்திய முக்கிய திட்டமாக உயர்த்த அன்வர் பரிந்துரை
March 16, 2026, 4:24 pm
‘ஆயம் கெப்புக்’ கேட்டதால் தாக்கப்பட்ட கர்ப்பிணி மனைவி
March 16, 2026, 4:18 pm
“கேபிள் திருட்டில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்”: போக்குவரத்து அமைச்சு
March 16, 2026, 4:17 pm
'ஓப் லாராஸ்' நடவடிக்கையில் சிக்கிய கள்ளத் துப்பாக்கிகள்: ஆடவர் கைது
March 16, 2026, 4:16 pm
தீ விபத்தில் கருகிய வீட்டிற்கு அருகிலேயே கண்ணீருடன் வாழும் 66 வயது மூதாட்டி
March 16, 2026, 4:15 pm
"பிரிந்தவர்கள் மீண்டும் இணைவோம்": அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹமத் ஜாஹித்
March 16, 2026, 4:05 pm
மலேசிய இந்திய முஸ்லிம் இளைஞர் இயக்கம் கெபிமா'வின் மாந்த நேய நோன்பு திறப்பு நிகழ்ச்சி
March 16, 2026, 3:27 pm
