நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்திய முஸ்லிம் இளைஞர் இயக்கம் கெபிமா'வின் மாந்த நேய நோன்பு திறப்பு நிகழ்ச்சி

கோலாலம்பூர்:

நோன்பு மாதத்தில் கெபிமா இயக்கத்தின் சார்பில் நேற்றைய முன்தினம் பொதுப் பணித் துறை மண்டபத்தில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சி, நலிந்தோர் நலம் நாடிய மாந்தநேய  நிகழ்ச்சியாக சிறப்பாக அமைந்தது.

இந்த இயக்கத்தின் சார்பில் 27 ஆம் ஆண்டாக நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சி இது என்று அமைப்பின் முன்னாள் தலைவர் டத்தோ உஸ்மான் கூறினார்.

கடந்த 30 ஆண்டுகளாக இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு குறிப்பாக இளைஞர்களுக்கான சமூகநல-மார்க்கம் சார் தொண்டாற்றி வருகின்ற கெபிமா இயக்கம், இந்த ஆண்டு நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்கள், பேறுகுறைந்த சிறுயோர்-பெரியோர் மற்றும் அடைக்கலம் நாடியுள்ளோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்புடன் உணவுப் பொருட்களையும் வழங்கியது. 

நோன்பு திறப்புடன் நடைபெற்ற இந்த சிறப்பு சமூக நல உதவி, அழிந்தோருக்கு பண்டிகைக்கால அணுகூலமாக அமைந்தது

மக்கள்  மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையுடனும் பெருநாளைக் கொண்டாடும் வகையில் கெபிமா  இந்த உதவியை செய்து வருவதாக, கெபிமாவின் தோற்றுநர் ஜனாப் முகமது பின் காதிர் அலி தெரிவித்தார்.

‘அகேட்’ குழுமத்தின் தலைமை இயக்குநர் டத்தோ வீரா நைனா முஹம்மது பின் சுல்தான் அப்துல் காதர், ‘கெபிமா’ அமைப்பின் ஆலோசகரும் ‘உபைதி’ குழுமத்தின் அறங்காவலர்க் குழுத் தலைவருமான டத்தோ ஹாஜி ஹிஷாமுதீன் பின் டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா, பெர்மிம் முன்னாள் தலைவர் டத்தோ ஹாஜி டாக்டர் சையத் இப்ராஹிம், டத்தோ சேக் ஜமீல், அலி ஷாஜகான் உள்ளிட்ட பெருமக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 
ஏறக்குறைய 500  பேருக்கு நலஉதவி வழங்கப்பட்டது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset