செய்திகள் மலேசியா
புத்ராஜெயா மதீனத்துல் குர்ஆன் மையம்: பிராந்திய முக்கிய திட்டமாக உயர்த்த அன்வர் பரிந்துரை
புத்ராஜெயா:
புத்ராஜெயாவில் தற்போது கட்டுமானத்தில் உள்ள மதீனத்துல் அல்-குர்ஆன் வளாகத்தை உம்மா மட்டத்தில் உள்ள ஒரு முக்கியத் திட்டமாக உருவாக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் முன்மொழிந்துள்ளார்.
அல்குர்ஆன் பிரதிகள் அச்சிடுதல், கல்வி, ஆராய்ச்சி மையமாக உருவாக்கப்படும் இந்த வளாகம் உள்ளூர், வெளிநாட்டு இஸ்லாமிய அறிஞர்களும் அமைப்புகளும் பங்கேற்கும் ஒரு ‘உம்மா’ திட்டமாக மேம்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.
“மடினத்துல் குர்ஆன் போன்ற மையத்தை உருவாக்கும் திட்டம் குறித்து இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்களில் அப்துல் லத்தீஃப் அவர்களுடன் விவாதிக்க உள்ளோம். துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபதில்லா யூசோப் முன்வைத்த நல்ல யோசனை ஒன்றுள்ளது. இந்த மையத்தை உள்ளூர், சர்வதேச அளவில் உம்மா திட்டமாக மாற்ற வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
“இது வெறும் கட்டிடம் மட்டுமல்ல; திட்டமிடப்பட்டதை விட அதிகமான உள்ளடக்கங்களைக் கொண்டதாக அமைந்து, இந்தப் பகுதியின் முக்கிய முஷாப் அச்சிடும் மையமாகவும், குர்ஆன் கல்வி, ஆராய்ச்சி நிறுவனமாகவும் உருவாக வேண்டும்,” என்றும் அவர் விளக்கினார்.
இந்த முயற்சியில் மலேசிய இஸ்லாமிய வளர்ச்சி துறை (JAKIM), உள்ளூர் பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் உள்ள நஸ்ருல் குர்ஆன் வளாகத்தில் நடைபெற்ற மலேசியா மடானி முஷாப் வெளியீட்டு விழாவில் உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
அதற்கு முன்னர், அன்வர் இப்ராஹிம் மலேசியாவின் முதல் ஹைப்ரிட் அல்குர்ஆன் முஷாபை வெளியிட்டார். இதில் இஸ்லாமிய கலிகிராபி கலை, டிஜிட்டல் புதுமைகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் QR குறியீடு இணைக்கப்பட்டுள்ளதால், வாசகர்கள் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு, தஜ்வீத் வழிகாட்டல், குர்ஆன் வசனங்களுடன் தொடர்புடைய STEM கூறுகளை அணுக முடியும்.
இந்த நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபதில்லா யூசோப், விவசாய, உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் சாபு, பிரதமர் அலுவலகத்தின் (மத விவகாரங்கள்) அமைச்சர் டாக்டர் ஸுல்கிப்லி ஹசன், பொது வேலைகள் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமத் மஸ்லான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 6:43 pm
ஜம்ரி வினோத் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
March 16, 2026, 6:42 pm
தமீம் டஹாரி மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்: ஐஜிபி
March 16, 2026, 6:41 pm
பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ரமணன் சந்தித்தார்
March 16, 2026, 5:30 pm
டாம் ஜெபட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சைஃபுதின் நஸுத்தியான் வெற்றி
March 16, 2026, 4:26 pm
சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது
March 16, 2026, 4:24 pm
‘ஆயம் கெப்புக்’ கேட்டதால் தாக்கப்பட்ட கர்ப்பிணி மனைவி
March 16, 2026, 4:18 pm
