நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது

கோத்தா பாரு: 

கிளந்தான் UMNO இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது.

இந்த முடிவு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வலியுறுத்திய சிக்கனமான செலவின நடைமுறையை ஆதரிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உலக பொருளாதார நிலைமையால் ஏற்படக்கூடிய நிதி சிக்கல்களை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கிளந்தான் UMNO தொடர்புக் குழு தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் ஜாஸ்லான் யாகுப் கூறியுள்ளார்.

ரமலான் மாத இறுதியில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 11 அன்று, பிரதமர் அன்வர் இப்ராஹிம் அனைத்து அமைச்சகங்கள், அரசாங்க அமைப்புகள், அரசுடன் தொடர்புடைய நிறுவனங்கள் இந்த ஆண்டில் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களால் உருவான உலக பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இந்தச் சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்த முடிவால் அரசாங்கம் எளிமையான, பொறுப்பான செலவின முறையைக் கடைப்பிடிக்கத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

மாநில பொருளாதாரத்தைப் பற்றி கருத்து தெரிவித்த அஹ்மட் ஜாஸ்லான், கூட்டாட்சி அரசாங்கம், தனியார் துறையின் ஆதரவு இல்லாமல் கிளந்தானின் பொருளாதார வளர்ச்சி இன்னும் பலவீனமாக இருப்பதாக கூறினார்.

மேலும், கிளந்தானின் வளர்ச்சியை ஜொகூர், பஹாங் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு, அவை ஆண்டுக்கு RM1 பில்லியனுக்கும் அதிகமான வருவாயைப் பதிவு செய்கின்றன என்றும், சுற்றுலா துறையில் முன்னேற்றம் கண்ட மலாக்கா போன்ற மாநிலங்களும் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset