நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்டாசுடன் விளையாடியதில் துண்டான 4 வயது சிறுவனின் விரல் 

சுங்காய் பட்டானி: 

மெர்பொக், கம்போங் தெம்பொயாக் பகுதியில் நேற்று நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு பட்டாசுடன் விளையாடிய போது விரல்களை இழந்ததுடன் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் மதியம் 12.45 மணியளவில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. அந்தச் சிறுவன், 9, 2 வயது வயது இரண்டு குழந்தைகளுடன் இருந்ததாக நம்பப்படுகிறது.

சம்பவம் தொடர்பான புகார் நேற்று மதியம் 2.15 மணிக்கு தஞ்ஜுங் டாவாய் காவல் நிலையம் மூலம் பதிவு செய்யப்பட்டது என்று கோலா மூடா மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

 "குழந்தை அழுததை அடுத்து அருகிலுள்ள அண்டை அயலார் கவனித்தனர். பின்னர் குடும்பத்தினர் அவரைச் சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் (HSAH) கொண்டு சென்றனர்.

சம்பவம் குழந்தைகள் சட்டம் 2001, பிரிவின் 31(1)(a) கீழ் விசாரணை செய்யப்படுகிறது. பயன்படுத்திய பட்டாசின் வகையும் இன்னும் விசாரணைக்கு உட்பட்டுள்ளது,” என அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset