செய்திகள் மலேசியா
‘ஆயம் கெப்புக்’ கேட்டதால் தாக்கப்பட்ட கர்ப்பிணி மனைவி
செராஸ்:
கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட ஆசையால் உணவு வாங்கித் தருமாறு கேட்டதால் ஸ்ரீ சபா அடுக்குமாடியில் பகுதியில் கடந்த புதன்கிழமை கர்ப்பிணியான ஒரு இல்லத்தரசி தனது கணவரால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
34 வயதான பாதிக்கப்பட்ட பெண் புதன்கிழமை இரவு 9.03 மணியளவில் காவல்துறையில் புகார் அளித்ததாக செராஸ் மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் முஹம்மத் ரோஸ்டி டாவுட் தெரிவித்தார்.
சம்பவம் மதியம் 3.30 மணியளவில் ‘ஆயம் கெப்புக்’ வாங்கித் தருமாறு கேட்டபோது, அவரது கணவர் அவமதிப்பான வார்த்தைகளால் திட்டியும் கோபமாகவும் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சந்தேக நபர் பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும், சமையலறை கத்தியை எடுத்து கழுத்தருகில் வைத்ததாகவும், முகத்தில் அறைந்தும் தலையில் குத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் காரணமாக பெண் கழுத்தின் வலது பகுதியில் காயமடைந்தார். பின்னர் அவர் சான்சலர் துவாங்கு முக்ரிஸ் (HCTM) மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
வழக்கு தொடர்பான விசாரணை தற்போது தொடர்ந்துவருகிறது என்று அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 6:43 pm
ஜம்ரி வினோத் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
March 16, 2026, 6:42 pm
தமீம் டஹாரி மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்: ஐஜிபி
March 16, 2026, 6:41 pm
பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ரமணன் சந்தித்தார்
March 16, 2026, 5:30 pm
டாம் ஜெபட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சைஃபுதின் நஸுத்தியான் வெற்றி
March 16, 2026, 4:26 pm
சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது
March 16, 2026, 4:25 pm
புத்ராஜெயா மதீனத்துல் குர்ஆன் மையம்: பிராந்திய முக்கிய திட்டமாக உயர்த்த அன்வர் பரிந்துரை
March 16, 2026, 4:18 pm
