செய்திகள் தொழில்நுட்பம்
சிப் வடிவமைப்புத் துறையில் சாதனை: ‘Arm’ நிறுவனத்துடன் கைகோர்க்கும் மலேசியா
கோலாலம்பூர்:
மலேசியாவில் செமிகண்டக்டர் (Semiconductor) சூழலமைப்பை வலுப்படுத்துவதற்கு, அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று பொருளாதார அமைச்சர் முஹம்மத் அக்மல் நஸ்ருல்லா முஹம்மத் நசீர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ‘Arm’-உடன் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
சமீபத்தில் ‘Arm’ நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையின் போது, தற்போதைய பயிற்சித் திட்டங்கள் மட்டும் போதுமானதாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மலேசியாவில் பயிற்சி பெறும் சிப் வடிவமைப்பாளர்கள், உள்நாட்டில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் வெளிநாடுகளுக்குச் செல்லும் சூழல் நிலவுவதாக அவர் கவலை தெரிவித்தார்.
சொந்தமாக சிப் வடிவமைப்புகளை உருவாக்குவதற்கு அறிவுசார் சொத்துரிமை (IP), 'ஆர்ம் கம்ப்யூட் சப்சிஸ்டம்ஸ்' ஆகியவையே மிக முக்கியமான காரணிகளாகும்.
இந்த வசதிகள் முழுமையாகச் செயல்படுத்தப்படாத வரை, சிப் வடிவமைப்பிற்கான முயற்சிகள் பலனளிக்காது என்றும், இதற்காக அரசாங்கம் கூடுதல் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் 13-வது மலேசியத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய செமிகண்டக்டர் வியூகத்தை நனவாக்குவதற்கு இக்கலந்துரையாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இத்துறை எதிர்கொள்ளும் சவால்களைக் களைத்து, மலேசியாவை ஒரு முன்னணி செமிகண்டக்டர் மையமாக மாற்ற தீவிர நடவடிக்கைகள் தேவை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
உலகளவில் ஸ்தம்பித்தது மெட்டா நெட்வொர்க்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீர் முடக்கம்
June 3, 2026, 3:44 pm
மோசடி அழைப்புகளை கண்டுபிடிக்க வருகிறது கூகுளின் 'Fake Call Detection'
April 24, 2026, 4:18 pm
