செய்திகள் தொழில்நுட்பம்
உலகளவில் ஸ்தம்பித்தது மெட்டா நெட்வொர்க்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீர் முடக்கம்
கோலாலம்பூர்:
உலகளாவிய நிலையில் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் தளங்களில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பல பயனர்கள் தங்களது சமூக ஊடக பக்கங்களை அணுக முடியாமல் அவதிக்குள்ளானதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட தளங்களில் பதிவுகள் புதுப்பிக்கப்படாமல் இருந்ததுடன், பல அகப்பக்கங்களில் கடைசியாகக் காணப்பட்ட பதிவுகள் இரண்டு முதல் மூன்று மணி நேரங்களுக்கு முன்பிருந்தவையாக இருந்ததாக ஆரம்பக் கண்காணிப்புகள் தெரிவிக்கின்றன.
பிரபல சேவை கண்காணிப்பு இணையதளமான “Down For Everyone Or Just Me” வெளியிட்ட தகவலின்படி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் தளங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே பதிவாகியிருந்தன.
இதனிடையே, பல பயனர்கள் திடீரென தங்களின் அகப்பக்கங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், மீண்டும் உள்நுழைய முயன்றபோது பிழைச் செய்திகள் தோன்றியதாகவும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். சிலர் மெசஞ்சர் சேவையிலும் சிக்கல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை இந்தத் தொழில்நுட்பக் கோளாறு தொடர்பாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கமொன்றை வெளியிடவில்லை. எனினும், உலகம் முழுவதும் பயனர்கள் சிக்கலை எதிர்கொண்டதாகக் கூறப்படுவதால், இது பரவலான சேவை முடக்கமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 3, 2026, 3:44 pm
