செய்திகள் தொழில்நுட்பம்
“தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டமிடுங்கள்”: 8-வது புத்ராஜெயா மன்றத்தில் சுல்தான் நஸ்ரின் அறிவுறுத்தல்
கோலாலம்பூர்:
புதிய தொழில்நுட்ப யுகத்தில் எழுந்துள்ள பாதுகாப்பு சவால்களைக் கருப்பொருளாகக் கொண்டு, எட்டாவது புத்ராஜெயா மன்றம் கோலாலம்பூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய பேராக் மாநிலச் சுல்தான் நஸ்ரின் முய்ஸுதீன் ஷா, வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை ஆரம்ப நிலையிலேயே முறைப்படுத்துவது அவசியம் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
குறிப்பாக, அணு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே அதனை முறைப்படுத்தும் சட்டங்கள் வந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், செயற்கை நுண்ணறிவு, மரபணுப் பொறியியல் போன்ற துறைகளில் அத்தகைய வரலாற்றுத் தவறுகளை உலகம் மீண்டும் இழைக்கக்கூடாது என்றார்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக, அவற்றைக் கட்டுப்படுத்தும் கொள்கை சட்டதிட்டங்களும் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், நவீனப் போர்முறைகள் தற்போது தொழில்நுட்பம், தகவல் மேலாண்மையைச் சார்ந்து மாறியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
அதிக செலவு பிடிக்கும் பாதுகாப்பு தளவாடங்களை விட, குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் போன்ற நவீனக் கருவிகள், தரவுப் பாதுகாப்பிற்கே எதிர்காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.
மலேசிய பாதுகாப்பு நிறுவனம் (MiDAS) ஏற்பாடு செய்திருந்த இந்த மன்றம், ஆசிய பாதுகாப்பு சேவைகள் (DSA), தேசிய பாதுகாப்பு (NATSEC) 2026 கண்காட்சிகளின் ஒரு அங்கமாக நடைபெற்றது.
எதிர்காலப் பாதுகாப்புத் துறையானது டிஜிட்டல் உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டே அமையும் என்பதை இந்த மன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 11:18 am
சீனாவின் புதிய உலக சாதனை: ஆழ்கடல் ஆராய்ச்சிக்காகப் பிரம்மாண்ட 'மிதக்கும் தீவு' தயார்
April 19, 2026, 6:49 pm
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட booster-ஐக் கொண்டு ராக்கெட்டைப் பாய்ச்சும் Blue Origin
April 4, 2026, 2:08 pm
இசைக் கலைஞர்கள் இனி தேவை இல்லையா?: இசை உலகை ஆட்டிப்படைக்கும் ஏஐ
March 25, 2026, 11:50 am
சிறுவர்கள் வாழ்க்கையில் விளையாடிய மெட்டா: 375 மில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்
March 24, 2026, 12:34 pm
காப்புரிமைப் போர்: சீனத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே முற்றிய மோதல்
March 23, 2026, 10:31 am
வெளிநாட்டு அனிமேஷன் தாக்கம்: குழந்தைகள் சிந்தனைக்கு புதிய அறைகூவல்
March 22, 2026, 5:22 pm
உலகின் முதல் 'தொழுகைக்கு உகந்த' செயற்கை கால்: மலேசியப் பேராசிரியரின் சாதனைப் படைப்பு
March 13, 2026, 12:48 pm
சிப் வடிவமைப்புத் துறையில் சாதனை: ‘Arm’ நிறுவனத்துடன் கைகோர்க்கும் மலேசியா
March 13, 2026, 12:45 pm
