செய்திகள் தொழில்நுட்பம்
வரலாறு படைக்கும் பாகிஸ்தான் விண்வெளி வீரர்கள்: சீனா வழங்கும் பிரத்யேகப் பயிற்சி
பெய்ஜிங்:
சீனாவின் விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பயிற்சி பெறுவதற்காகப் பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் விண்வெளி ஆய்வு மையமான 'தியாங்கோங்' (Tiangong) நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர்கள் இவர்களே என்று சீன விண்வெளி ஆய்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முஹம்மத் ஜீஷன் அலி, குர்ரம் தாவூத் ஆகிய இருவருமே இந்தப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள விண்வெளி நிலையத்தில் தங்கிப் பணியாற்றுவதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெறவுள்ளனர்.
அனைத்துக் கட்டப் பயிற்சிகளும் மதிப்பீடுகளும் நிறைவடைந்த பின்னர், இவர்களில் ஒருவர் விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் 'பெய்லோட் நிபுணராக' (Payload Specialist) பணியாற்றுவார்.
சீனாவின் விண்வெளித் திட்டத்தில் முதல்முறையாக வெளிநாட்டினரை இணைத்துக்கொள்வது, சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இதற்கான முதற்கட்டத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தற்போது இந்த இருவரின் பெயர்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் சீன விண்வெளி நிலையத்தில் காலடி எடுத்து வைக்கும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையை இவர்களில் ஒருவர் பெறவுள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
உலகளவில் ஸ்தம்பித்தது மெட்டா நெட்வொர்க்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீர் முடக்கம்
June 3, 2026, 3:44 pm
மோசடி அழைப்புகளை கண்டுபிடிக்க வருகிறது கூகுளின் 'Fake Call Detection'
April 24, 2026, 4:18 pm
