செய்திகள் தொழில்நுட்பம்
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
கோலாலம்பூர்:
உலகின் முன்னணி உடனடி தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப், பயனர்களின் தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் வகையில், தொலைபேசி எண்ணுக்குப் பதிலாக 'பயனர்பெயர்' (Username) மூலம் தொடர்புகொள்ளும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அதன் தாய் நிறுவனமான META அறிவித்துள்ளது.
இந்தப் புதிய வசதி அறிமுகமாகும் முன்னரே, பயனர்கள் தாங்கள் விரும்பும் பயனர்பெயரை முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொலைபேசி எண் என்பது தனிப்பட்ட தகவல். அதை பகிராமல் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள விரும்பும் பயனர்களுக்காகவே இந்தப் பயனர்பெயர் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது," என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "இந்த வாரம் முதல் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த பயனர்பெயரை முன்பதிவு செய்யலாம். இதற்கு வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பை புதுப்பித்த பிறகு, Settings > Account > Username என்ற பகுதிக்குச் சென்றால் போதுமானது," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அம்சம் மூலம், பயனர்கள் தங்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணை வெளிப்படுத்தாமல், தனித்துவமான பயனர்பெயர் வழியாக மற்றவர்களுடன் பாதுகாப்பாக தொடர்புகொள்ள முடியும். இதன் மூலம் பயனர்களின் தனியுரிமையும் பாதுகாப்பும் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சியின் மூலம், ஏற்கனவே பயனர்பெயர் அடிப்படையிலான அடையாள முறையைப் பயன்படுத்தும் பிற சமூக ஊடக, தகவல் பரிமாற்ற தளங்களின் வரிசையில் வாட்ஸ்அப்பும் இணைகிறது. இது பயனர்களுக்கு அதிக வசதி, பாதுகாப்பு, நம்பகத்தன்மை கொண்ட தகவல் பரிமாற்ற அனுபவத்தை வழங்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:13 am
தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
