செய்திகள் தொழில்நுட்பம்
சீனாவின் புதிய உலக சாதனை: ஆழ்கடல் ஆராய்ச்சிக்காகப் பிரம்மாண்ட 'மிதக்கும் தீவு' தயார்
ஷாங்காய்:
கடல்சார் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், உலகின் முதல் மிகப் பெரிய மிதக்கும் ஆராய்ச்சித் தளத்தைச் சீனா அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
'ஆழ்கடல் மிதக்கும் தீவு' என அழைக்கப்படும் இந்தத் தளம், அனைத்துக் காலநிலைகளிலும் கடலில் நிலைத்து நின்று ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல் வளங்கள், ஆழ்கடல் உபகரணங்கள், கடல்சார் அறிவியல் குறித்த ஆய்வுகளுக்கு இது பெரும் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரம்மாண்டமான கட்டமைப்பானது முதன்மைத் தளம், கப்பல் வழி ஆய்வகம், தரைவழி ஆதரவு அமைப்பு ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள நவீன 'அரை மூழ்கி' (Semi-submersible) தொழில்நுட்பம், நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள ஆழ்கடல் கருவிகளைச் சோதிக்கவும், சுமார் 10,000 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யவும் வழிவகை செய்கிறது.
ஷாங்காய் ஜியாவ் டாங் பல்கலைக்கழகத்தின் (SJTU) மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2030-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவடையவுள்ள இந்த மிதக்கும் தீவு, ஆழ்கடல் சுரங்கப் பணிகள், எண்ணெய்-எரிவாயு அகழ்வு ஆய்வுகளுக்கு முதன்மைத் தளமாக விளங்கும்.
இது கடல்சார் வணிகத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்கவும், கடல் வாழ் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ளவும் உலக நாடுகளுக்குப் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:13 am
தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
