செய்திகள் தொழில்நுட்பம்
மோசடி அழைப்புகளை கண்டுபிடிக்க வருகிறது கூகுளின் 'Fake Call Detection'
உங்கள் அம்மாவிடமிருந்து ஒரு போன் கால் வருகிறது. உங்கள் போன் திரையில் அவருடைய பெயர் தெரிகிறது. போனை எடுத்தால், மறுமுனையில் பேசுவது அச்சு அசலாக உங்கள் அம்மாவின் குரல். அவர் மிகவும் பதட்டத்துடன், அவசரமாகப் பணம் வேண்டும் என்று கேட்கிறார். ஆனால், அது உண்மையிலேயே உங்கள் அம்மாவாக இல்லையென்றால் என்ன செய்வீர்கள்?
இந்த பயமுறுத்தும் காட்சி சமீபகாலமாக மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குரல்களை அப்படியே நகலெடுத்து, நமக்கு நம்பிக்கையானவர்கள் போலப் பேசி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இந்த ஏமாற்று வேலைக்கு முடிவு கட்டும் விதமாக, ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தையோ அல்லது தனிப்பட்ட தகவல்களையோ இழக்கும் முன், இந்த மோசடியைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.
புதிய 'Fake Call Detection' அம்சம்
ஏஐ மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்காக "ஃபேக் கால் டிடெக்ஷன்" (Fake Call Detection) என்ற புதிய பாதுகாப்பு கருவியை கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் போல் நடித்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகளைக் கண்டறிந்து எச்சரிப்பதே இதன் வேலை. இந்த அம்சம், ஆண்ட்ராய்டு 12 மற்றும் அதற்குப் பிந்தைய வெர்ஷன்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த மாதம் முதல் உலகளவில் வெளியிடப்படுகிறது. முதற்கட்டமாக, கூகுளின் பிக்சல் (Pixel) ஸ்மார்ட்போன்களில் 'Phone by Google' ஆப் மூலம் இது கிடைக்கும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
