செய்திகள் தொழில்நுட்பம்
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
நியூயார்க்:
கூகுள் நிறுவனம், அதன் ஜெமினை ஏஐயைப் பயன்படுத்த மெட்டாவுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ஃபினான்ஷியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு திட்டங்களுக்காக கூடுதல் கணினி ஆற்றலுடைய உள்கட்டமைப்புத் திறன் தேவை எனக் கூறியது.
ஆனால் கூகுள் நிறுவனத்தால் இதனை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தனது ‘ஜெமினை ஏஐ’மாதிரிகளை மெட்டா நிறுவனம் பயன்படுத்துவதற்குக் கூகுள் கட்டுப்பாடுகளை விதித்தது.
கூகுள் உரிமையாளரான ஆல்பாபெட், கடந்த மார்ச் மாதம் மெட்டாவிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தது.
மெட்டா விலைக்கு வாங்க விரும்பிய முழுமையான ‘ஜெமினை ஏஐ’ கணினித் திறனைத் தங்களால் வழங்க முடியாது என்று கூகுள் கூறியதாக அந்த நாளேடு கூறியது.
இந்தத் தட்டுப்பாடு காரணமாக மெட்டாவின் சில ஏஐ திட்டங்கள் பாதிக்கப்பட்டு தாமதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மற்ற சில வாடிக்கையாளர்களும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், கூகுளின் ஏஐ மாதிரிகளுக்கு மெட்டாவிடம் இருந்து மிக அதிக அளவிலான தேவை இருந்ததால், அந்நிறுவனமே இதனால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக ஃபினான்ஷியல் டைம்ஸ் குறிப்பிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:13 am
தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
